சென்னை : கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் 144 மக்கள் ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில் ஆட்டோ ஒட்டுநர்கள் ஆட்டோவை இயக்க கூடிய சூழ்நிலை இல்லாமல் இருக்கின்ற இந்த இக்கட்டான வேளையில் அதிரடி குரல் அறக்கட்டளையின் சார்பில் சென்னை, வடபழனி – விஜயா மருத்துவமனை அருகில் உள்ள அதிரடி குரல் தலைமை ஆட்டோ ஒட்டுநர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அன்றாட தேவையான அரிசி, பருப்பு போன்ற நிவாரண பொருட்களை சமூக நோக்குடன் அதிரடி குரல் அறக்கட்டளையின் நிறுவனர் வி.என். ஜெயகாந்த் அவர்கள் வழங்கினார். மேலும் ஆட்டோ ஒட்டுநர்களின் வாழ்வாதரத்திற்கு இவர் பெரிதும் உதவி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.