சென்னை: அகில இந்திய பத்திரிகை ஊடக சங்கம் சார்பில் தமிழக அரசு அமைத்துள்ள பத்திரிகையாளர் நல வாரிய குழுவில் பத்திரிகையாளர்கள் சங்கத்தையும் நியமிக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாநில தலைவர் வேல்முருகன் அவர்கள் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.இதில் பத்துக்கும் மேற்பட்ட சங்கத்தின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வரவேற்புரையாக வியாசை முரளி,இனியன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.

இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையாக வீரத் தமிழர் ஆ.வேல்முருகன் தேசிய தலைவர் AIPMA அவர்கள் தலைமை தாங்கினார்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக C.R. பாஸ்கரன் நிறுவனர் -நீதியின் குரல் அமைப்பு.மூத்த பத்திரிகையாளரும், இலக்கிய எழுத்தாளருமான கொடைக்கானல் காந்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாக தஞ்சை தமிழ்பித்தன் தலைவர் தமிழ் சங்க பலகை,டி.எஸ்.ஆர் சுபாஷ் தலைவர் -தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட், கதிர்வேல் பொது செயலாளர்- தமிழ்நாடு ஆல் மீடியா ஜெர்னலிஸ்ட் யூனியன்,சிவதமிழன் தலைவர்-தமிழ்நாடு பிரஸ் அன்ட் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன்,வி.எம்.தமிழன் வடிவேல் பொது செயலாளர்-ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கம்,பழனி கண்ணன் ஊடக உரிமைக் குரல் , நாற்காலி செய்தி ஆசிரியர் கார்த்திகேயன், தருமராஜா தலைவர்-இந்திய ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நல சங்கம்,என்.கே.முத்தையா பொருளாளர்-தமிழ்நாடு செய்தி துறை யூனியன்,மதி ஒளி ராஜ்குமார் ஆசிரியர் -திரைதீபம்,முஸ்தபா பத்திரிகையாளர்,GPS.கார்த்திக் தலைவர் தென்னிந்திய ஒருங்கிணைந்த பத்திரிகையாளர்கள் சங்கம், ராஜசேகர் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கம் மேலும் பல சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டு பத்திரிகையாளர் நல வாரியம் தொடர்பாக தமிழக அரசின் அறிவிப்புக்கு கருத்துக்களை பதிவு செய்தனர்.

நல வாரிய குழுவில் மூத்த பத்திரிகையாளர்களை நியமிக்க வேண்டும் என்றும், பத்திரிகையாளர்களின் சங்கத்தையும் நியமிக்க வேண்டும் என்று அனைத்து சங்கத்தின் நிர்வாகிகளும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.