காரபாக்கம்: கே.சி.ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி மற்றும் மதுரா கோட்ஸ் சார்பில் எம்பிராய்டரி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் எம்பிராய்டரி போட்டி காரப்பாக்கம் கே.சி.ஜி கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது.
மேலும் இந்தப் போட்டியில் வனவாணி, ஹிந்துஸ்தான், ஸ்ரீ சங்கரா, செயின்ட் ஜான்ஸ், ஐ.ஐ.டி, எம்.எம்.சி, பி.எஸ்.பி.பி உள்ளிட்ட 10 பள்ளிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.
சமீபகாலமாக பள்ளிகளில் எம்பிராய்டரி மற்றும் பிற கைவினைப் பயிற்சிகள் குறித்த ஆர்வம் மாணவர்களிடம் குறைவாக உள்ளது.
எனவே இந்தப் போட்டி மூலம் எம்பிராய்டரி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, பள்ளிகளில் படைப்பாற்றல் மற்றும் திறன் மேம்பாட்டை ஏற்படுத்துகிறது. மேலும் இத்துறையில், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கே.சி.ஜி கல்லூரியின் தலைமை செயல் அதிகாரி முனைவர் ஆனந்த் ஜேக்கப் மற்றும் கே.சி.ஜி கல்லூரியின் இயக்குனர் முனைவர் ஆனி ஜேக்கப் ஆகியோர் இந்நிகழ்ச்சியை ஆதரித்து வழிநடத்தினர். இந்நிகழ்ச்சிக்கு கே.சி.ஜி கல்லூரியின் முதல்வர் முனைவர் பி.தெய்வ சுந்தரி தலைமை வகித்தார். இ
பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஷெர்ஸ்டா ஐயர் மற்றும் டிசைனர் ஓஷ் ஆடை, எம்.டி.சாரா டிசைன் ஸ்டுடியோவின் இயக்குநர் திருமதி சஷி ரேகா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கே.சி.ஜி கல்லூரி நிர்வாகம் மற்றும் மதுரா கோட்ஸ் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
இறுதியாக பேஷன் டெக்னாலஜி துறைத் தலைவர் முனைவர் வி.பானு ரேகா மற்றும் மதுரா கோட்ஸைச் சேர்ந்த திருமதி.சசிகலா ஆகியோர் நன்றியுரை ஆற்றினர்.





