சென்னை : மக்கள் நலக் கழகத்தின் நிறுவனத்தலைவர் திருக்குறள் தொண்டர் தமிழ்த் தாயகன் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது, அறவழியில் அரசியல், முறையான ஆட்சி, வளமான நாடு என்ற முழக்கத்தை மையமாக வைத்து செயல்பட்டு வரும் மக்கள் நலக் கழகம் சமூகநீதி, பொருளாதார வளர்ச்சி, மக்கள் நலம் காத்தல் என மக்களின் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்றைய அரசியலில் மக்கள் வாழ்வதற்காக கட்சிகள் இல்லை, கட்சிகள் வாழ்வதற்காக மக்கள் கருவியாக பயன்படுத்தப் படுகிறார்கள். எங்கும் எதிலும் முறைகேடுகள் , சீர்கேடுகள், பொய்யான, போலியான, கவர்ச்சியான சமூகநீதி ஏற்ற அரசியலும் கட்சிகளும் அரசியல் வளர்ச்சி அடைந்து பல ஆண்டுகளாகியும் இன்று வரை நாமும் நம் நாடும் கடை நிலையில் இருக்கின்றோம்.

இதையெல்லாம் நாம் இன்று உணராவிட்டால் என்று உணர்வது? ஆண்கள், பெண்கள், இளையோர் என எல்லோரும் சேர்ந்து ஒத்த கருத்தோடு நல்லிணக்கத்தோடு களமிறங்கி மக்கள் நலம் காக்கும் நல்லாட்சி அமைய அறவழியில் அரசியல் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் அதற்காக மக்கள் நலக் கழகம், அண்ணல் காந்தியடிகளின் கிராமங்களில்தான் இந்தியா வாழ்கிறது..

கிராமங்கள் தன்னிறைவு அடைய வேண்டும் என்ற திட்டத்தையும்.. இன்றுவரை கனவாகவே இருக்கும் ஐயா ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் இந்தியா வல்லரசு என்ற கனவு இந்தியா திட்டத்தையும் நிறைவேற்றிட வளமான இந்தியாவை உருவாக்கிட களமிறங்கி செயல்படுவோம்.

மக்கள் நலம், நாட்டின் நலம், சமத்துவம், சமூகநீதி, இயற்கை வளம் , சுற்றுச்சூழல், தூய்மை, சுகாதாரம் ஆகியவற்றை காத்திடவும் வறுமை, உறவு நலம் இளைஞர் நலம், பெண்கள் பாதுகாப்பு, கல்வி பழம்மருத்துவ பயன் ஆகியவற்றை முதன்மையாக கொண்டு திருவள்ளுவரின் அறவழியில் களமிறங்கி உண்மையாகவும் வெளிப்படையாகவும் எளிமையாகவும் வலிமையாகவும் அரசியல் கொண்டாடுவோம்.

பொய்யான போலியான கவர்ச்சியான ஆடம்பரமான மக்களுக்கு எதிரான முறைகேடான சீர்கெட்ட அரசியல் கலாச்சாரத்தை அடியோடு ஒழித்து மக்கள் நலம் காக்கும் உண்மையான அரசியலை ஒளிரச் செய்வோம் உழவர் திருநாளாம் பொங்கல் திருநாளில் அனைவருக்கும் மக்கள் நல கழகத்தின் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் கூறினார்.