கோரோனா விழிப்புணர்வு கவிதை.
கொரோனா வெளியில் வெறிக்கொண்டு திரியுதுங்க!
போகாதீங்க வீட்டை விட்டு போகாதீங்க !
மீறாதீங்க அரசு கட்டளையை மீறாதீங்க!
மறக்கதீங்க கொரோனா வைரஸ் வந்தால் உயிர் போகுமுங்க! உறவும் போகுமுங்க!
எங்கேயும் சுற்றாதீங்க யாரு உசுரையும் எடுக்காதீங்க!
இல்லத்தில் தனித்திருங்க மனிதர்களிடம் தள்ளி இருங்க!
கண்ணுக்கு புலப்படாதுங்க கொடிய நோய்தான் கோரோனாவுங்க!
கொத்துக் கொத்தாய் உயிர் பலிங்க;
கோரோனா மரண பயத்தையும் காட்டுதூங்க;
உலக ஒற்றுமையும் காட்டுதுங்க!
மனிதன் பயத்தில் நடுங்குறாங்க!
மனிதனை மனிதன் காப்போங்க;
நீ வீட்டில் அடங்கா விட்டால், வெளியில் கொரோனா பல மடங்கு பரவுங்க!
இதுவும் கடந்து போகும் என்று நினைத்தாலும் வறுமை மட்டும் போகலிங்க!!
சுனிதா ஷெர்லி
Visit our website, roottrust.org
Follow our Facebook page
http://www.facebook.com/roottrust2005/
