தாம்பரம்:
கொரோனா தொற்று காலத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு மற்றும் முன்கள பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் தினேஷ் கண்ணன் என்பவர் மாரத்தான் உலக சாதனை முயற்சியை துவங்க உள்ளார். அதற்கான அறிமுக விழா சென்னை தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் தனலட்சுமி பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில்
திருபெருபுதூர் சட்டமன்ற உறுப்பினர் கு. செல்வப்பெருந்தகை தாம்பரம் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா மற்றும் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சரஸ்வதி மனோகரன் ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினர்.

மேலும் இந் நிகழ்வில் நடுவீரப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் மு.சுப்பிரமணி, மணிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஐயப்பன் நடுவீரப்பட்டு ஒன்றிய கவுன்சிலர் அன்பழகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேசினர். இந்த நிகழ்விற்கு தனலெட்சுமி பொறியியல் கல்லூரியின் தலைவர் ராம மூர்த்தி தலைமை வகித்தார். லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவன தலைவர் ஜோசப் இளந்தென்றல் அவர்கள் முன்னிலை வகித்தார்.

இந்த உலக சாதனை முயற்சி கன்னியாகுமரியில் துவங்கி திருநெல்வேலி, மதுரை, கோயம்பத்தூர், திருச்சி மார்க்கமாக 1000 கிலோமீட்டர் ஓடுவதாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த உலக சாதனை நிகழ்வினை தனலட்சுமி கல்லூரி ஒருங்கிணைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா மற்றும் படப்பையை சேர்ந்த சியாமளா கேஸ் ஏஜென்ஸி நிறுவனம் இணைந்து இந்த உலக சாதனை மராத்தானுக்கான உதவிகளை வழங்கவுள்ளனர். இந்த நிகழ்வு வருகிற 29.11.2021 அன்று துவங்க உள்ளது. இந்த K2C மாரத்தான் நிகழ்வினை லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கி கௌரவிக்க உள்ளது.

இந்த நிகழ்வில் கல்லூரி முதல்வர் ரமேஷ் வரவேற்புரை வழங்கினார். லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் தலைவர் ஜோசப் இளந்தென்றல் அவர்கள் சிறப்புரை வழங்கினார். ஒட்ட பந்தய வீரர் தினேஷ் கண்ணன் வழங்கினார் மேலும் இந்த நிகழ்வில் லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிர்வாகிகளான தலைமை செயல் அதிகாரி கார்த்திக்குமார்,நிர்வாக செயல் அதிகாரி செல்வம் உமா, ஸ்டிபன் சீனிவாசன், தினேஷ் சாலமோன் ஹரிஹரன், இலக்கியா. சஞ்சய் கல்லூரி மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.இந்த நிகழ்ச்சியினை ஐஸ்வர்யா சிறப்புற தொகுத்து வழங்கினார்.
