சென்னை :
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 1,000 குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள், போர்வைகள் மற்றும் பாய்கள் விநியோகம· நிவாரணப் பொருட்கள் அந்தந்த பகுதி அரசு நிர்வாக அதிகாரிகள் மூலம் விநியோகிக்கப்படுகிறது…
சென்னை : ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெடின் சமூக சேவை பிரிவாக செயல்படும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் (HMIF) சென்னை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் (HMIF) சார்பாக அறங்காவலர் ரமேஷ் அவர்கள் அரிசி ,மளிகைப் பொருட்கள், போர்வைகள் மற்றும் பாய்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை பாதிக்கப்பட்ட சுமார் 1,000 குடும்பத்தினருக்கு பயன்படும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர்
ககன்தீப் சிங் பேடி ஜ.ஏ.எஸ் அவர்களிடம் வழங்கினர். சமீபத்தில் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய HMIF, விரைவில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கும் இந்த உதவிகளை வழங்க உள்ளது.

நிவாரண உதவிகள் விரைவாக பாதிக்கப்பட்டவர்களைச் சென்றடைவதை உறுதிசெய்ய அந்தந்த பகுதி உள்ளாட்சி நிர்வாகம் மூலம் விநியோகம் செய்யப்படும்.
இந்த நிவாரண உதவிகள் குறித்து கருத்து தெரிவித்த ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்-ன் நிர்வாக இயக்குனர் திரு. SS கிம் அவர்கள், “எந்தவொரு இயற்கைப் பேரிடரில் இருந்தும் மீண்டெழ தமிழ்நாட்டிற்கு உதவுவதில் ஹூண்டாய் பெரும் அக்கறை கொண்டுள்ளது. 25 ஆண்டுகளாக எங்களது இல்லமாகத் திகழும் தமிழ்நாட்டின் மக்கள் மீதான நன்மதிப்பு பல ஆண்டுகளாக எங்களது இல்லமாகத் திகழும் தமிழ்நாட்டின் மக்கள் மீதான நன்மதிப்பின் வெளிப்பாடாக இந்த செயலை நாங்கள் கருதுகிறோம்.
எங்களது உலகளாவிய கொள்கையான ‘மானுடத்திற்கான முன்னேற்றம்’ என்பதன் அடிப்படையில் இத்தகைய சோதனைக் காலங்களில் தொடர்ந்து நாங்கள் தமிழக அரசு மற்றும் மக்களுடன் இணைந்து நிற்போம்,” என்றார்.
படம்: ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் (HMIF) அறங்காவலர்கள் திரு. ரமேஷ் N ஆகியோர் மழை வெள்ள பாதிப்பிற்கு உள்ளான மக்களுக்கான நிவாரணப் பொருட்களை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் . ககன்தீப் சிங் பேடி, I.A.S. அவர்களிடம் வழங்கினர்.

HMIF பற்றி ஒரு அறிமுகம்:
இந்தியாவின் முதல் ஸ்மார்ட் போக்குவரத்து தீர்வுகள் வழங்கும் நிறுவனம் மற்றும் பெரும் ஏற்றுமதி நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்-ன் சமூக சேவை பிரிவாக செயல்பட உருவாக்கப்பட்டதுதான் ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் (HMIF) ஆகும். சமூக மேம்பாடு, ஆரோக்கியம், கல்வியும், தொழில்கல்வி பயிற்சியும், சாலை பாதுகாப்பு, கலை, அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் தனது பெருநிறுவன சமூக பொறுப்பு செயல்பாடுகள் மூலம் பங்களிப்பை வழங்கும் நோக்கத்துடன் 2006ம் ஆண்டில் இந்த அறக்கட்டளை துவக்கப்பட்டது. சமூகத்தின் நலிந்த பிரிவினரின் வாழ்வை மேம்படுத்த ஹுண்டாய் மோட்டார் இந்தியாவின் ஆதரவுடன் நாட்டில் நிலைப்புத்தன்மை மிக்க அனைவருக்குமான மேம்பாட்டு செயல்பாடுகளை ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் மேற்கொண்டு வருகிறது.
‘மானுடத்திற்கான முன்னேற்றம்’ எனும் தனது உலகளாவிய கொள்கையின் அடிப்படையில் சமூக மேம்பாட்டிற்கான பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் முதன்மையான நிறுவனமாக ஹூண்டாய் இருந்து வருகிறது. கடைக்கோடியில் இருக்கும் குக்கிராமங்களையும் சென்றடையும் ‘ஸ்பர்ஷ் சஞ்சீவனி’ எனும் மருத்துவ சேவை, ‘சாக்ஷம்’ எனும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான பயிற்சி, #BeTheBetterGuy எனும் சாலை பாதுகாப்பு பிரச்சாரம், Art for Hope, H-Social Creator, கொரோனா நிவாரணப் பணிகளில் அரசுக்கு உதவிக்கரம், ஆக்ஸிஜன் ஆலைகள் நிறுவல், வெண்டிலேட்டர் தயாரிப்பு, முகக்கவசம் வினியோகம், கோவிட்-19 போராளிகளின் குழந்தைகளுக்கு கையடக்க கணினி வழங்கி அவர்களது கல்வியில் உதவிக்கரம், பள்ளிகள் புணரமைப்பு, கொரோனா பாதிப்பு பெருமளவு நிலவிய காலகட்டங்களில் நாடெங்கும் உள்ள நலிந்த பிரிவினருக்கும், நமது தொழிற்சாலையை சுற்றியும் நுகர்பொருட்கள் வினியோகம் செய்தல் ஆகியன ஹூண்டாய் மோட்டார் ஃபவுண்டேஷன் (HMIF)ன் குறிப்பிடத்தக்க சேவைப்பணிகள் ஆகும்.
