நடிகர் சூர்யாயின் அகரம் அறக்கட்டளை மூலம் கல்வி பயின்ற தஞ்சை இளைஞர் விஜய் லிங்கன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
குரோம்பேட்டை :
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுக்கா, தெற்கு நத்தம் கிராம பகுதியை சேர்ந்த
கண்ணன் மற்றும் விஜயலட்சுமி ஆகியோர்களின் மகனும் இளம் கவிஞருமான தஞ்சை விஜய் என்கிற இளைஞர் திண்டுக்கல் ஆர்.வி.எஸ் கல்லூரியில் இளங்கலை கணிதம் பயின்றவர்.இளம் கவிஞரான தஞ்சை விஜய் அவர்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். இவர் தமிழ் திரைப்பட நடிகர் சூர்யா அவர்கள் நடத்தி வரும் அகரம் தொண்டு நிறுவனத்தின் மூலம் கல்வி பயின்றவர்.

இவர் தனது இளம் வயதிலேயே கவிதை மற்றும் இலக்கியம் மீது ஆர்வம் கொண்ட இவர் துளிப்பா (ஹைக்கூ) கவிதை எழுதும் திறமை கொண்டவர், திறமையை வளர்ந்துக் கொண்டவர் என்றால் மிகையாகாது.
இவர் தன்னுள் இருக்கும் சாதனையை வெளிக்கொணரும் விதமாக சென்னை குரோம்பேட்டையில் அமைந்துள்ள லிங்கன் உலக சாதனை புத்தகம் அலுவலகத்தில் காலை 11:11 மணி முதல் மதியம் 12.45 மணி வரை தொடர்ந்து 1.34 நிமிடங்களில் 250க்கு மேற்பட்ட துளிப்பா (ஹைக்கூ) கவிதைகளை எழுதி புதிய உலக சாதனை நிகழத்தினார்.

இந்த சாதனை முயற்சியை லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவன தலைவர் ஜோசப் இளந்தென்றல் அவர்கள் அங்கீகரித்து சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கி கெளரவப் படுத்தினார்.
இந்த நிகழ்வில் தலைமை செயல் அதிகாரி கார்த்திக் குமார் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி செல்வம் உமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்… விங்கன் உலக சாதனை நிர்வாகியான சஞ்சய் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
மேலும் இந்த தொழிற்நுட்ப
நிகழ்வினை ஹரிஹரன் மற்றும் இலக்கியா ஆதியோர் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்.

மேலும் இந்நிகழ்வின் இறுதியில் விங்கன் உலக சாதனை புத்தகத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாகிகள் தஞ்சை விஜய் அவர்களை மேலும் சந்தோஷம் படுத்தும் விதமாக கேக் வெட்டி மகிழ்வித்தனர்.
