ஆயிரம்விளக்கு : தென்னிந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான பிகானீர்வாலா , முப்பத்தைந்தாயிரம் சதுர அடியில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் புதிய உணவகக் கிளை தொடக்க விழா நடைப்பெற்றது.

இந்த தொடக்க விழா நிகழ்வில் இந்நிறுவனத்தின் தலைவரான ரினி ஜெயின் மற்றும் குடும்பத்தினர் விளக்கேற்றி தொடங்கி வைக்க பல்வேறு பிரபலங்கள்,தொழிலபதிபர்கள், இணைய எழுத்துத்துலகத்தினர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

பிகானீர்வாலா நிறுவனம் பாரம்பரிய இந்திய இனிப்பு மற்றும் கார உணவுகளின் தனித்துவமான மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் பாரம்பரியமிக்க ராஜஸ்தான் மாநில பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது.

முதலில் பிகானீர் நம்கீன் பந்தர் என்ற பெயரில் ஸ்ரீ லால் சந்த் அகர்வால் அவர்களால் புகழ்பெற்ற கோட் கேட் பகுதியில் சிறிய அளவிலான இனிப்பகமாகவே இது ஆரம்பிக்கப்பட்டது.

நாளடைவில் படிப்படியாக வளர்ந்து இன்று ஆறு நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கிளைகளுடனும் 8000த்திற்கும் மேற்பட்ட பணியாளர்களுடனும் பல லட்சம் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கி வருகிறது

மேலும் விரிவான மற்றும் பல வகையான உணவு பொருட்கள் இங்கு பரிமாறப்படுகிறது.

அது மட்டுமில்லாமல் காலை உணவு, சிற்றுண்டி,மதிய உணவு வகைகள் பரிமாறப்படுகிறது.

எட்டு லட்சம் சதுர அடிக்கும் மேற்பட்ட இடவசதியுடன் ஐந்து உணவு உற்பத்தி தொழிற்சாலைகள் கொண்டு தரமான மற்றும் அரசின் வழிமுறைகள் பின்பற்றி நடத்தப்பட்டு இனிப்பு மற்றும் இதர உணவு பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.

புதிய கிளையின் தொடக்க விழாவில் 60க்கும் பல்வேறு துறை வல்லுநர்கள் , 30க்கும் மேற்பட்ட இணைய எழுத்தாளர்கள், தொழில்துறையினர், பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

பெரிய அளவிலான ஊர்திகள் நிறுத்தும் இடவசதியுடன் கூடிய வகையில் இடம் தேர்வு செய்யப்பட்டு பெருந்தொற்று காலத்தை கணக்கில் கொண்டு அரசின் வழிமுறைகள் பின்பற்றி இந்த திறப்பு விழா நடைபெற்றது.