தங்குவதற்கு இடமில்லாமல் தவித்த வந்த காவலாளிகளுக்கு இலவசமாக வீடு வழங்கி உதவிய பாலகிருஷ்ணன் அறக்கட்டளை
நுங்கம்பாக்கம் : சென்னை நுங்கம்பாக்கம் ஜோசியர் தெருவில் பாலகிருஷ்ணன் அறக்கட்டளை 10 வருடமாக இயங்கி வருகிறது… இதன் நிறுவனராக சுகுமார் பாலகிருஷ்ணன் என்பவர் திறம்பட, மனித நேயத்தோடு பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறார்.
குறிப்பாக ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை , கொரோனா பேரிடர் ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் நலிந்த. எளிய பொது மக்கள் மற்றும் முதியோர்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரண உதவிகள் வழங்குவது, பெண்கள் முதியோர் காப்பகத்திற்கு தேவையான உதவிகள் செய்வது போன்ற உதவிகளை அறக்கட்டளை மூலம் நிர்வாகிகளுடன் இணைந்து சிறப்பாக செய்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக நுங்கம்பாக்கம், ஜோசியர் தெருவில் உள்ள ரியல் என்க்ளேவ் என்கிற வணிக கட்டிட வளாகத்தில்
காவலாளிகளாக பணிபுரிந்து வரும் கோவிந்தா மற்றும் ஜனகராஜ் குடும்பத்தினர் தங்குவதற்கு போதிய இடமில்லாமல் தவித்து வந்ததை அறிந்து உடனடியாக 5 லட்சம் மதிப்புள்ள இலவசமாக கான்கிரீட் வீடு வழங்கும் நிகழ்வு சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
மேலும் இந்த நிகழ்வின் முக்கிய அங்கமாக நிர்வாகி சுதா சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் காவலாளிகள் குடும்பத்தினருக்கு வீட்டிற்கான சாவியை வழங்கினார்.
இந்த நிகழ்வில் அறக்கட்டளை நிர்வாகிகளான சுரேந்திரன்.
செந்தில் அருள் ,துரை, ரவிக்குமார், சீனிவாசன், ஹரி மற்றும் தமிழக வாகன ஒட்டுநர்கள் நலச்சங்கத்தின் துணைத் தலைவர் மாதேஷ்வரன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.






