சென்னை:
மஜகவின்திருவல்லிக்கேணி பகுதி இஸ்லாமிய கலாச்சாரப்பேரவை சார்பில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள இக்கட்டான சூழ்நிலையில் வாழ்வாதாரம் இழந்து வாடும் பொதுமக்கள், சாலையோர மக்களுக்கு உணவு தேவையை அறிந்து இதன் பொருளாலர் அப்துல் லத்தீப் அவர்கள் தலைமையில் டாக்டர்.நடேசன் சாலை பகுதியில் வசிக்கும் 500 ஏழை மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திருவல்லிக்கேணி பகுதி நிர்வாகிகளான அன்சர், துரப்உசேன், ஜம்சித், பயாஸ், நந்தகுமார், ரோஃப் பாஷா,லத்தீப், ஷயின்ஷா. அமானுல்லா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.