சென்னை :
கொரோனோ தொற்று பரவல் ஊரடங்கால் வருமானம் இன்றி தவித்து வரும் பொது மக்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்கள் பல உதவிகளை செய்து வருகின்றனர் ….

அதன் ஒரு தொடர்ச்சியாக
பிரதர்வுட் தொண்டு நிறுவனம் மற்றும் அம்மாச்சி ஸ்ட்ரீட் கிச்சன் இனைந்து 2019ம் ஆண்டில் இருந்து சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்ற மக்களுக்கும், உணவின்றி தவிக்கும் மக்களும் உணவு மற்றும் மளிகை பொருட்கள் வழங்கி வருகிறார்கள்..
சென்னை ஈக்காட்டுதாங்கள் அம்பேத்கர் நகரில் உள்ள 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இரண்டு மாதத்திற்கு தேவையான அரிசி மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை ஒருங்கிணைப்பாளர் சதீஷ் குமார் வழங்கினார்.

பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நிவாரண பொருட்களை வாங்கி சென்றனர். இந்த நிகழ்வில் தொண்டு நிறுவன ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்