வள்ளுவர் கோட்டம் :கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பின் சார்பில் இரும்பு மற்றும் சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்,கட்டுமான பொருட்களின் விலை நிர்ணயக் குழுவை அமைக்க வேண்டும்,பதிவு மற்றும் முத்திரைத்தாள் கட்டணத்தை குறைக்க வேண்டும், அங்கீகாரமற்ற மனைகளை வரைமுறைப்படுத்த வேண்டும், மின் இணைப்பு விண்ணப்பத்தில் மின் ஒப்பந்தக்காரர் கையொப்பம் பெற வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பின் செயலாளர் எஸ். யுவராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது .

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னாள் நலவாரிய தலைவரும் கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பின் தலைவருமான பொன்குமார் அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பின் செயலாளர் விருகை வி.என்.கண்ணன், பொருளாளர் எஸ்.ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தென்சென்னை வடக்கு மாவட்ட தலைவர் அரிமா எஸ்.எம். முருகானந்தம், வட சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் பொறியாளர் டி.தயாநிதி, தென் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் முத்துக்குமார்,வட சென்னை மேற்கு மாவட்ட தலைவர் கே. கார்த்திக் ,தென் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் பி.வி.ஆர் பழனி வேலன் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.

மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் BAI முன்னாள் அகில இந்திய தலைவர் ஆர்.ராதாகிருஷ்ணன், கிரெடாய் தலைவர் எஸ்.ஸ்ரீதரன், சென்னை கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் பொறியாளர் பி. குமார கிருஷ்ணன், செயலாளர் பொறியாளர் டி.துறைமுருகன், டிப்பர் லாரி மற்றும் மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எல். நாராயணன்,ஆர்.ரவி, ஆர்.வெங்கடேசன், இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்டு டெவலப்பர்ஸ் நிலத் தரகர்கள் சங்கத்தின் துணைத்தலைவர் சேலவயல் கே. சரவணன், செயலாளர் ஜே.செந்தில்குமார், மணல் லாரி உரிமையாளர் சங்கத்தை சேர்ந்த எஸ்.ஏ.கிருஷ்ணமூர்த்தி, வி. நந்தகோபால் , தமிழக கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் மாநில இணைப் பொதுச் செயலாளர் பி. கே .மூர்த்தி, தென்சென்னை மாவட்டத் தலைவர் என்.லெட்சுமணன், தமிழ்நாடு மின் பணியாளர்கள் கூட்டமைப்பின் பொருளாளர் கே.சீனிவாசன், தமிழக சுதந்திர வாடகை வாகன சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். ஜூட் மேத்யூ ஆகியோர் கலந்து கொண்டு 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரை ஆற்றினர்.
மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்டுமானம் மற்றும் அனைத்து தொழில் கூட்டமைப்பின் மாநில நிர்வாகிகள், ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் மற்றும் பல்வேறு சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்
(எஸ்.ஏ.ராஜ்குமார்
செய்தியாளர்
யுகம் நியூஸ்-96773 49196)
