வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சென்னை எழிலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.தொடர்ந்து பேசிய பேரிடர் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர் .பி உதயகுமார்:

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை சராசரியை விட 20 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது ஆண்டு சராசரி மழையளவு 304.9 மில்லிமீட்டர் ஆனால் இந்த வருடம் 424 புள்ளி 4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. பெரும்பாலான அணைகளில் நீர்மட்டம் சென்ற ஆண்டை விட உயர்ந்துள்ளது.பவானி சாகர் , மணிமுத்தாறு, பேச்சிப்பாறை, பெரியாறு, பாபநாசம், பரம்பிக்குளம் ,ஆழியாறு, பெருஞ்சானி, சேலையாறு, கிருஷ்ணகிரி, திருமூர்த்தி அணை சென்ற ஆண்டை விட நீரின் கொள்ளளவு அதிகமாக உள்ளது.

மேலும் சென்னை குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, செங்குன்றம், செம்பரம்பாக்கம், சோழவரம் நீர்த்தேக்கங்களில் கொள்ளளவு இன்றைய தேதியில் கடந்த ஆண்டில் உள்ள அளவை விட அதிகமாக உள்ளது.வீராணம் நீர் தேக்கத்தின் கொள்ளளவில் மட்டும் குறைந்துள்ளது

வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிகப்படியான மழை கிடைக்கப்பெறுகிறது அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் முடிய உள்ள இந்த வட கிழக்கு பருவமழை காலத்தில் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் இந்த பருவமழையின் தாக்கம் அதிகமாக இருப்பதோடு மாநிலத்தில் இயல்பான மழை அளவில் 47.32 விழுக்காடு மழை அளவு கிடைக்கப் பெறுகிறது

இந்த ஆண்டு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக வட கிழக்கு பருவ மழை தொடங்கியது சிறிது காலதாமதம் ஆகிறது என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இம் மாதம் 1 .10. 2020 முதல் 20. 10. 2020 வரையிலான மழையின் அளவு 105.3 மில்லி மீட்டர் ஆனால் 72.6 மில்லி மீட்டர் அளவு பெய்துள்ளது இது 31 சதவீதம் குறைவு

பேரிடர் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் :

தேடுதல் மீட்பு பாதிப்புக்குள்ளான பகுதிகளில் இருந்தும் மக்கள் வெளியேறி பாதுகாப்புக்காக தங்க வைக்கலாம் என்று 662 பல்துறை மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன 1000 காவலர்களை கொண்டு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது

பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் பயிற்சி பெற்ற 5505 காவலர்கள் அனைத்து மாவட்டங்களிலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதுமட்டுமல்லாது ஊர்க்காவல் படையை சார்ந்த 691 நபர்களும் பேரிடர் மீட்பு படையினர் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளனர்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையின் கீழ் 4199 தீயணைப்பு வீரர்களும், 9259 பாதுகாக்கும் தன்னாவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

1094 கல்வி நிறுவனங்கள், 2561 தொழிற்சாலைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு வகைப்படுத்தப்பட்டுள்ளன. பேரிடர் காலங்களில் உடனடியாக செயலாற்றினார் 43 ஆயிரத்து 450 முதல்நிலை வேட்பாளர்கள் ஆயத்த நிலையில் உள்ளனர் இவர்களில் 14732 மகளிர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் கால்நடைகளை பாதுகாக்க கூடுதலாக 8871 முதல்நிலை மீட்பார்கள் ஆயத்த நிலையில் உள்ளனர்.பேரிடர் காலங்களில் பலத்த காற்றினால் விழும் மரங்களை வெட்டி அகற்றுவதற்கும் பேரிடர் அல்லாத காலங்களில் மரங்களை நட்டு வளர்ப்பதற்கான 9909 முதல் நிலை மீட் பாளர்கள் ஆயத்த நிலையில் உள்ளனர்.

இதுமட்டுமின்றி பாம்பு பிடிக்கும் திறன் உள்ளவர்கள் நீரில் முழ்குபவர்களையும் காப்பாற்ற நீச்சல் வீரர்கள் கண்டறியப்பட்ட தயார் நிறைய உள்ளனர்

மாவட்டங்களில் 3915 மரம் அறுக்கும் எந்திரங்கள், 2897 ஜே.சி.பி இயந்திரங்கள், 2115 ஜெனரேட்டர்கள் மற்றும் 483 அதி திறன் கொண்ட பம்புகள் , தேடல் மற்றும் மீட்பு பணிகள் தயார் நிலையில் உள்ளனர்.

கடந்த ஆண்டு 2015 வெள்ளத்தில் போது தாழ்வான உள்ள வெள்ளை பாதிப்புக்குள்ளாகும் இடங்களில் வசிக்கும் மக்களை தங்கவைக்க 539 தங்கும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 88 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது முன்னெச்சரிக்கையாக வெள்ளம் பாதிப்புக்குள்ளாக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்களை மாற்று இடங்களில் தங்க வைக்கும் பொருட்டு 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் உட்பட 4713 தங்கும் மையங்களில் 7 லட்சத்து 39 ஆயிரத்து 450 நபர்களை தங்க வைக்க தயார் நிலையில் உள்ளன.

மேலும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பொருட்டு கூடுதலாக தற்காலிக தங்கும் மையங்களாக பள்ளிகள், திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாயக் கூடங்கள் 4680 தங்கும் இடங்களை தயார் நிலையில் உள்ளன

அவசரகாலத்தில் காலங்களில் தகவல் தொடர்புக்காக மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையம் 1070 மற்றும் மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மையம்
1077.மற்றும் TNSMART செயலி மற்றும் சமுக வலைதளம், மின்னணு மற்றும் அச்சக ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு பேரிடர் குறித்து தகவல் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது வருவாய்துறை கூடுதல் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி,பேரிடர் மேலாண்மை இணை இயக்குனர் ரா.பன்னீர்செல்வம் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்