சென்னை தி.நகர் மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் கலைநயமிக்க பிரம்மாண்ட நகைகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கம்
சிறப்பு சலுகையாக வைரத்தின் மதிப்பில் 20% வரை தள்ளுபடி
சென்னை :உலகின் கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி சென்னை தி.நகர்,வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் ஷோரூமில் நடைபெற்றது .
தலைசிறந்த நகை வடிவமைப்பாளர்களால் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இந்த நகைகள் ஒவ்வொன்றும் அந்த கலைஞர்களின் நிபுணத்துவத்தையும் ,தனிப்பட்ட திறன்களையும், அனைத்து நகைகளிலும் ஒரு கலைநயம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையிலும் உள்ளன .

இந்த கண்காட்சி மூலமாக சென்னை மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் விற்பனையகத்தில் கலைநயமிக்க அணிகலன்கள் கிடைப்பது சிறப்பம்சமாகும் .
அணிந்தாலே ஜொலிக்கும் வைர நகைகளான மைன் ( Mine) பிரம்மாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட நகைகள் தொகுப்பாக பிரீசியஸ் நகைகள், கைவினைக் கலைஞர்களால் கையால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான எத்தினிக் நகைகள் , நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிவமைப்புகளில் உருவான டிவைன் நகைகள் , குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ஸ்டார்லெட் ஆகியவை இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

