சென்னை :தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர் (குலாலர்) சங்கம் சார்பில் வருகின்ற பொங்கல் பண்டிக்கைக்கு ரேசன் கார்டு தாரர்களுக்கு புது பானையும், புதுஅடுப்பும் இலவசமாக வழங்கிட அரசு ஆணை பிறப்பிக்க வேண்டியும் , மேலும் கொரோனா தொடர் ஊரடங்கால் பாதிப்படைந்து, தவித்து வரும் நலிவடைந்த மண்பாண்ட தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக மண்பாண்ட தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து ஆயிரமும், ஒரு மூட்டை அரிசியும் தந்து உதவி வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு டாக்டர். சேம.நாராயணன் அவர்கள் கோரிக்கை விடுத்தார்.
இதற்காக இன்று (12.10 2020 ) மாநில தலைவர் டாக்டர்.சேம. நாராயணன் அவர் சென்னை கடற்கரை சாலையிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியாளரை சந்தித்து கோரிக்கை அளித்தார்.
மண்டல தலைவர் ஏ.ஏகாம்பரம், வட சென்னை மாவட்ட த்தலைவர் டி. பிரபாகரன், மத்திய சென்னை மாவட்டத் தலைவர் வி.குருமூர்த்தி, தென் சென்னை மாவட்டத் தலைவர் ஆர்.இராதா கிருஷ்ணன், மாநில இளைஞயரணி தலைவர் எஸ்.என்.பழனி, மகளிரணி தலைவி சரஸ்வதி அன்பு உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
