சென்னை :அன்னை தெரசா சார்ட்டபிள் டிரஸ்ட் சார்பில் அன்னை தெரசா அவர்களின் 24-வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் அமைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் 200க்கும் மேற்பட்ட ஏழை, எளியோருக்கு அரிசி, பருப்பு, உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.மேலும் அன்னை தெரசா ஆட்டோ ஒட்டுநர் சங்கத்தில் இறந்த ஆட்டோ தொழிலாளர்களுக்கு நிதி உதவிக்கான காசோலையை நிறுவனர் ஜி.கே.தாஸ் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் டி.வி. சேவியர் .சிவாஜிநாதன்,ஸ்டீபன்,பாண்டியராஜன்,சுப்பிரமணியம்.விவேகானந்தன், ஏ.சேவியர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.