சென்னை:

கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த தீயணைப்பு வீரர்கள் 29 பேர் சென்னை இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தாமாக முன் வந்து பிளாஸ்மா தானம் வழங்கினர்.

இதனை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.சி. விஜயபாஸ்கர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு பிளாஸ்மா தானம் வழங்கிய தீயணைப்பு துறை வீரர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
அப்போது தீயணைப்புதுறை இயக்குநர் டாக்டர்.சி. சைலேந்திரபாபு ,வட மண்டல இணை இயக்குநர் ப்ரியா ரவிச்சந்திரன் உள்ளிட்ட தீயணைப்பு துறை உயர் அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.