சென்னை :
நேவிகேட்டர் ஆன்மீக சுற்றுலா நிறுவனம் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத வகையில் மண் மற்றும் நவதானியங்ளை பயன்படுத்தி தயாரான 500 விநாயகர் சிலைகளை நிர்வாக இயக்குநர் ரிதனிகா பொதுமக்களுக்கு
இலவசமாக வழங்கினார்.
இதுகுறித்து நேவிக்கேட்டர் ஆன்மீக சுற்றுலா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரிதனிகா கூறுகையில்..,இந்துக்களின் முக்கிய விழாக்களில் ஒன்றான விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் வகையில் பல பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்படுகின்றன.
அந்த சிலைகளில் பெரும்பாலானவை நீர்நிலைகளை பாதிக்கக்கூடிய பிளாஸ்டாப் பாரிஸில் தயாரிக்கப்படுவதால், அவற்றை தண்ணீரில் கரைக்கும்போது, நீர்நிலைகளின் சுற்று சூழல் பாதிக்கப்படுகிறது.

இதைத்தடுக்கும் விதமாக நமது பாரம்பரிய முறையில் இயற்கை வழியில் மண் மற்றும் சிறுதானிய வகைகளை நிரப்பி 500
விநாயகர் சிலைகளை தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கியுள்ளோம்.அதேபோன்று விதை பந்துகளையும் மக்களுக்கு வழங்கி வருகிறோம்.
என்றார்.
