சேப்பாக்கம், ஆக,12
அக்னி சிறகுகள் ஓட்டுநர் நல சங்கம் சார்பில் சாலை வரிகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 30க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது..
அதன்பின் செய்தியாளரிடம் பேசிய அக்னி சிறகுகள் ஓட்டுநர் நல சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜன் தாமஸ் கூறியது :
கால் டாக்ஸி வாகனங்களுக்கு வாடகையை நிர்ணயம் செய்ய வேண்டும்.
தற்போது அமுலில் உள்ள இ-பாஸ் நடை முறையை ரத்து செய்ய வேண்டும்.
நலவாரியம் அமைக்க வேண்டும்
இ பாஸ் முறையை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும்
அரசு டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்.
அரசே டீசல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.
வாகன கடன்களுக்கு வட்டியை ரத்து செய்ய வேண்டும்.
பேரிடர் கால சாலை வரியை ரத்து செய்ய வேண்டும்.
தமிழக முதல்வர் எங்கள் வேதனைகளைக் மனதில் கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.
