சென்னை :ஜூன்,25,
சென்னை புளியந்தோப்பு கே.பி.பூங்கா பகுதியில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள 1400 படுக்கை வசதி கொண்ட கொரோனா சிறப்பு பிரிவை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த ம தமிழக முதல்வர் வழங்கிய பல்வேறு அறிவுரைகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறதாகவும், திரு.வி.க. நகர் மண்டலத்தில் பல்வேறு சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு தாக்கம் குறைந்துள்ளது அனைவரும் பாராட்டும் வகையில் உள்ளது.வீடுகளில் தனிமை படுத்தப்பட்டிருப்பவர்களுக்கு தேவையான அனைத்தும் வீடுகளுக்கே சென்று வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்,

ஆரம்ப நிலையிலேயே இந்த நோய்தொற்றை கண்டறியும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த குடிசை மாற்று வாரிய சிறப்பு பிரிவில் சுடுதண்ணீர் வசதி,ஒலிப்பெருக்கி, பொழுதுபோக்கிற்காக தொலைக்காட்சி, காலிங் பெல், சி.சி.டிவி கேமரா என பல்வேறு வசதி உள்ளது. மேலும்
4 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளின் மேற்பார்வையில் இயங்கி வருகிறது.

அரசு மற்றும் மாநகராட்சியின் செயல்பாடுகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.குறைசொல்வது, குழப்புவது, அதற்கு காரணம் கற்பிப்பது எளிது, ஆனால் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு இதிலிருந்து மீண்டு வந்த பின் விவாதம் இருக்க வேண்டும் இப்போது கொரோனா ஏற்படுத்தி வரும் சவால்களை வெல்ல ஊக்கம் தர வேண்டும், களத்தில் பணியாற்றி வருபவர்களை ஊக்குவிப்பது தான் தற்போது அவசியமான ஒன்று,அறிக்கைகள் அரசியலை இதிலிருந்து மீண்டு வந்த பின் வைத்து கொள்வது தான் சரி.
மக்களை காப்பாற்றுவதில் ராணுவீரரை போல முதல்வர் களத்தில் நின்று பணியாற்றி வருகிறார் என்றார்.