திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்களுக்கு நிவாரணம் வழங்கிய இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் (IMJU)….
திருவள்ளுர் : மே, 27
தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நாள் முதல் தொய்வு இல்லாமல் பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் பலர் வறுமையில் வாடும் நிலையில் உள்ளனர். அதில் பலருக்கு ஊதியமும் முறையாக வழங்கப்படாமல் இருப்பதை கருத்தில் கொண்டு இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் 13வது கட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பணியாற்றும் திருத்தணி மற்றும் திருவள்ளூர் பத்திரிகையாளர்கள் பலருக்கு அரிசி மூட்டை, சமையல் எண்ணெய், மளிகைப் பொருட்கள் மற்றும் முகக் கவசங்கள் ஆகியவை IMJU சங்கத்தின் மாநிலத் தலைவர் மோகன் தாரா அவர்கள் தலைமையில் மாநிலச் செயலாளர் சங்கர் மற்றும் இணைச் செயலாளர் ஸ்பைடர் சூளை சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் திருவள்ளூர் தாலுகா அலுவலக வளாகத்தில் நிவாரண பொருட்கள் வழங்கபட்டது.

தங்களுக்காக சென்னையில் இருந்து வந்து நிவாரணம் வழங்கியதற்கு திருவள்ளூர் மாவட்ட பத்திரிகையாளர்கள் நன்றியினை தெரிவித்தனர்.

