சென்னை:
பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் -13 அடையாறு, கோட்டம் 177 – வேளச்சேரிக்குட்பட்ட பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு கூட்டுப் பணியாக தூய்மைப்பணி, புகைபரப்பு பணி, மருந்து தெளிக்கும் பணி ,மற்றும் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாக கூடிய பொருட்களை அகற்றும் பணி ஆகியவை பொது சுகாதாரத் துறையால் மேற்கொள்ளப்பட்டது.


மேலும் வேளச்சேரி பகுதியில் மட்டும் 17 பள்ளிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் அதிதீவிரமாக மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.


