பெருமாள்பட்டு:
திருவள்ளூர் மாவட்டம், பெருமாள்பட்டில் அமைந்துள்ள ஸ்ரீராம் பாலிடெக்னிக் கல்லூரியில், சூரிய மின்சக்தி துறையில் மாணவர்களின் தொழில்நுட்பத் திறன் மற்றும் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் Integrated Solar Workforce Development Programme சூரிய மின்சக்தி தொழில்நுட்பப் பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் Hoping Minds மற்றும் Katina Skills Pvt. Ltd.நிறுவனங்களின் திறன் மேம்பாட்டு ஒத்துழைப்புடன் நடைபெற்ற இப்பயிற்சியில், சூரிய மின்சக்தி அமைப்புகளின் நிறுவல், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான நடைமுறைப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
A Technician – Ground Mount Installation மற்றும் Technician Rooftop Installation ஆகிய பிரிவுகளில் மாணவர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்பட்டது. சோலார் பேனல்களை நிறுவும் முறைகள், தேவையான கருவிகளைப் பயன்படுத்துதல், நிறுவல் செயல்முறைகள், பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் செய்முறை விளக்கங்களுடன் எடுத்துரைக்கப்பட்டன.
சூரிய மின்சக்தித் துறையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேலைவாய்ப்புகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் தொழில்துறைக்குத் தேவையான திறன்களைப் பெறும் வகையில் இப்பயிற்சி Build Skills. Power Careers. Brighten Futures என்கிற உயரிய நோக்கத்துடன், சுத்தமான மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் திறமையான மனிதவளத்தை உருவாக்குவதற்கான முயற்சியாக இந்நிகழ்ச்சி அமைந்தது.
செப்டம்பர் 17 முதல் 23 ஆம் தேதி வரை* நடைபெற்ற இப்பயிற்சியின் மூலம், மாணவர்கள் சூரிய மின்சக்தி தொழில்நுட்பத்தைப் பற்றிய அறிவுடன் மட்டுமின்றி, நடைமுறைத் திறன்களையும் பெற்றனர். இதன் மூலம் சோலார் துறையில் எதிர்கால வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் மாணவர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளன.
கல்லூரி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
