திருவொற்றியூர் : மே,20

கொரோனா பெரும் தொற்றால் 144 ஊரடங்கு பொது முடக்கத்தால் ஏழை, எளிய மற்றும் பலதரப்பட்ட மக்கள் பெரும் பாதிப்பு குள்ளாகி வாழ்வாதாரமின்றியும், பொருளாதார நெருக்கடியிலும் தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன் மற்றும் தொழிலதிபர் கே.கார்த்திக் ஆகியோர் சமூக நோக்குடன் சென்னை திருவொற்றியூர் தொகுதிகுட்பட்ட 4வது வட்டத்தில் உள்ள எர்ணாவூர்,பஜனை கோயில் தெரு பகுதிகளில் உள்ள மூத்த குடிமக்கள், வாழ்வாதாரம் இழந்து வசித்து(தவித்து) வரும் சுமார் 300 ஏழை எளிய மக்களுக்கு அரிசி,பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய மளிகை பொருட்கள் தொகுப்பை வழங்கினர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை 4வது வார்டு இளையரணி செயலாளர் பி.ஆர்.ஜி. தினேஷ் குமார் சிறப்பாக செய்திருந்தார்.

மேலும் இந்நிகழ்வில் முன்னாள் கவின்சிலர் இ.வேலாயுதம் எஸ்.பி.புகழேந்தி, விம்கோ கே.லெனின், அண்ணா தொழிற்சங்க நகர துணைத்தலைவர் எஸ். பாலகிருஷ்ணன், எஸ்.சரவணன்,ஆர். வெங்கட்,என்.டி.ஆர். ரவி, துரைபாபு, இ.வடிவேலு வி.பி.நகர் லோகு,மாணிக்கவேல், கே. ரமேஷ்,எஸ்.தன்ராஜ், ஆர்.தனசேகரன்,மு.சிவன்,சி.பாபு வி.லட்சுமி,ஜி.குப்புராணி, பேபி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தியதிலிருந்து முன்னாள் எம்.எல்.ஏ குப்பன் அவர்கள் தொடர்ச்சி இதுவரை 50,000 க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு நிவாரண பொருட்களையும், அம்மா உணவகத்திற்கு நிவாரண நிதியும் சமூக அக்கறையுடன் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

எஸ்.ஏ.ராஜ்குமார் -செய்தியாளர்
(யுகம் நியூஸ்)