சென்னை:செந்தூர் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் சாதனைக்களம்விருதுகள் -2026 வழங்கும் விழா
சென்னை, இராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சிட்டி சென்டர் மாலில் இதன் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனருமான செந்தில்குமார் அவர்கள் தலைமையில் சிறப்புற நடைப்பெற்றது. Ingenious Charm World Records (ICWR) அமைப்பின் Chief Adjudicator ஆனந்த் ராஜேந்திரன் அவர்கள் முன்னிலை வகித்தார். தமிழக வெற்றி கழகத்தின் சோழிங்க நல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஈசி ஆர் சரவணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வில் சமூக சேவை, அரசியல், திரைப்படம், விளையாட்டு, அழகு மற்றும் நலவாழ்வு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்புப் பங்களிப்பிற்காக விருதுகள் பெற்றனர்.

மேலும் இந்நிகழ்வில்
சேலம் மாவட்ட த்தை சேர்ந்த சமூக ஆர்வலர், தன்னார்வலர், இயற்கை ஆர்வலர் இப்படி பல பரிமாணங்களில் பயணித்துக்கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் புரட்சி பெண்ணாக முன்னிலைப்படுத்தி வரும் கே. மணிமொழி அவர்களுக்கு சிறந்த சமூக சேவை தன்னார்வலர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.