புதுச்சேரி:
இளம் தலைமைத்துவம், இராஜதந்திரம் மற்றும் அறிவுசார் சிறப்பின் அற்புதமான கொண்டாட்டமாக, புதுச்சேரி புனித பேட்ரிக் மேல்நிலைப் பள்ளி தனது முதலாவது மாதிரி ஐக்கிய நாடுகள் மாநாடான SPMUN ’26 என்கிற மதிப்புமிக்க ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது.

இம்மாநாடு 2026 அக்டோபர் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நீடித்த கடுமையான போட்டி மற்றும் உயர்மட்ட இராஜதந்திர விவாதங்களுக்குப் பிறகு, அகில் இந்திய அரசியல் கட்சிகள் கூட்டமான (AIPPM) சிறந்த குழுவாக தேர்வு செய்யப்பட்டது.
இன்று சிந்தி, நாளை வழிநடத்து” என்கிற எழுச்சிமிகு குறிக்கோளிற்கிணங்க ஏற்பாடு செய்யப்பட்ட இம்மாநாடு, பள்ளி வளாகத்தை சர்வதேச இராஜதந்திரத்தின் துடிப்புமிக்க மையமாக மாற்றியது. புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தை சேர்ந்த புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களான தி ஸ்டடி லெகோல் இன்டர்நேஷனல், வாசவி இன்டர்நேஷனல், பிரிம்ரோஸ் பள்ளி, விவேகானந்தா வித்யாலயா, ஆதித்யா வித்யாஷ்ரம் மற்றும் பெங்களூரு யுனைடெட் வேர்ல்ட் அகாடமி ஆகியவற்றிலிருந்து இளம் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
புதுச்சேரி பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் குபேந்திரன் அவர்கள் இந்த மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
கோவை இன்டர்நேஷனல், வேலம்மாள் போதி மற்றும் மவுண்ட் கார்மல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த நிர்வாகக் குழுவினர் இதில் இடம்பெற்றனர்.

UNGA-DISEC, UNHRC, WHO, AIPPM மற்றும் சர்வதேச பத்திரிக்கை குழு (IPC) ஆகிய ஐந்து குழுக்கள், உலகளாவிய மற்றும் தேசிய பிரச்சினைகள் குறித்து விவாதித்தன. முதல் நாளில் சக்திவாய்ந்த உரைகள், குழு விவாதங்கள் மற்றும் இணைய உதவியின்றி சிந்திக்க வைக்கும் நெருக்கடி சூழ்நிலைகள் இடம்பெற்றன. இரண்டாம் நாள் தீர்மானங்கள் தயாரித்தல் மற்றும் பல குழுக்களை ஒருங்கிணைத்த புதுமையான ஒருங்கிணைந்த நெருக்கடி சோதனையில் கவனம் செலுத்தியது.

AIPPM குழு விதிவிலக்கான தந்திரோபாயம் மற்றும் குழுப்பணியை வெளிப்படுத்தி வெற்றி பெற்றது. ஒவ்வொரு குழுவிலும் சிறந்த பிரதிநிதி, உயர் பாராட்டு, சிறப்பு குறிப்பு உட்பட சுமார் பத்து விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் இந்த நிறைவு விழாவில் பல்ஸ்பே கோவொர்க்கிங் நிறுவனர் சங்கரானந்த் பாலராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஒட்டுமொத்த சாம்பியனாக புனித பேட்ரிக் பள்ளி வெற்றி பெற்றது, இப்பள்ளிக்கு பெருமைமிகு மைல்கல்லாக அமைந்தது. போட்டியைத் தாண்டி, SPMUN-26 மாணவர்களுக்கு தலைமைத்துவம், பேச்சுவார்த்தை மற்றும் உலகளாவிய விழிப்புணர்வை கற்றுக்கொடுத்து, எதிர்கால பதிப்புகளுக்கு ஒரு உயர்ந்த தரத்தை நிர்ணயித்தது.

புனித பேட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் ஃபிரெட்ரிக் ரெஜிஸ், மருத்துவ இயக்குநர் டாக்டர் ஜீட்டா ஃபிரெட்ரிக், முதல்வர் ஸ்டெல்லா ஆகியோரின் வழிகாட்டுதலிலும், ஒருங்கிணைப்பாளர் முனைவர்.
ரம்யா தேவராஜன் அவர்களை தலைமையிலும், நிகழ்ச்சித் தொகுப்பாளர் அனிதா, MUN ஆசிரியப் பொறுப்பாளர்கள், ஒருங்கிணைப்புக் குழுவினர், மாணவப் பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வலர்களின் அயராத உழைப்பாலும், சிறந்த குழு ஒத்துழைப்பு இரண்டு நாள் SPMUN -26 மாநாடு சிறப்பாக நடைபெற்றது.
