அண்ணாநகர்:
எழுச்சி சிலம்பம் அகாடமியின் 3ஆம் ஆண்டு ஆயுத பூஜை விழா சென்னை, அண்ணாநகர் கம்பர் காலனி மைதானத்தில் சிறப்புற நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் எழுச்சி சிலம்பம் அகாடமியின் செயலாளரும், தமிழக வெற்றி கழகத்தின் 95 வது வட்ட கழக பொருளாளருமான சிலம்பம் த. பிரவீன் அவர்கள் தலைமை வகித்தார்.

மேலும் இந்நிகழ்வில் அண்ணாநகர் கம்பர் காலனி நல அமைப்பின் தலைவர் ஸ்ரீராம்ஜி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வின் முன்னதாக நமது தமிழ்நாட்டின் பாரம்பரிய கலையான சிலம்பத்தை போற்றும் வகையில் மாணவ, மாணவிகள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

மேலும் இந்நிகழ்வில் சிலம்ப ஆசான்கள், மாணவ-மாணவிகள், கம்பர் காலனி நல சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் திறக்க கலந்துக்கொண்டனர்.
