மயிலாப்பூர்:
லயன் கிளப் ஆஃப் மெட்ராஸ் லஸ் சார்பில் வாரம்தோறும் உணவு வழங்கும் பசியாற்றும் சேவை திட்டம் துவக்கப்பட்டது
மேலும் லயன் கிளப் ஆஃப் மெட்ராஸ் லஸ் 37 ஆண்டுகளாக மக்களுக்கு தேவையான சமூக சேவை திட்டங்களை சிறப்புடன் செய்து வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக மயிலாப்பூர், டி .எஸ். வி கோவில் தெரு. அருகில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மதிய உணவை வாரந்தோறும் வியாழக்கிழமையன்று 1.00 மணியளவில் வழங்கி வருகின்றனர்.

மேலும் இந்த சேவையை கிளப்பின்
தலைவர் லயன் என்.சந்திரசேகர்,செயலாளர் லயன் எம்.கணபதி ஆகியோரின் ஒருங்கிணைப்புடனும்,
பொருளாளர் லயன் சி.எஸ். நந்தகுமார், மற்றும் லயன்ஸ் கிளப்பின் உறுப்பினர் லயன் தயானந்தன் ஆகியோர் ஏற்பாட்டில் செய்து வருகின்றனர்.


இந்த பசியாற்றும் சேவை பற்றி லயன்ஸ் கிளப்பின் பொருளாளர் லயன் சி .எஸ். நந்தகுமார் அவர்கள் கூறுகையில், மயிலாப்பூர் என்றாலே கோயில்கள் நிறைந்த பகுதியாகும், இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பக்தர்கள் கோயில் தரிசனத்திற்காக வருகின்றனர். இங்கு அனைவருக்கும் உணவு வழங்கும் திட்டத்தை கடந்த மூன்று வாரங்களாக செய்து வருகின்றோம்.
உணவகங்களின் விலை அதிகமாக இருப்பதாலும், சரியான நேரத்திற்கு வீட்டுச் சாப்பாட்டை உட்கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.
ஆகவே இங்கு வரும் பக்தர்களுக்கு ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மதியம் 1 மணியளவில் உணவளிக்க லயன்ஸ் கிளப் ஆஃப் மெட்ராஸ் லஸ் மூலம் உணவளிக்கும் திட்டத்தை துவக்கி செயல்படுத்தி வருகிறோம்.
இச்சேவை ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்வில்
மயிலை நண்பர்கள் ரூபத்,
மு.சரவணன், கனகராஜ் லாண்டரி பாபு, உன்னி, காலத்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

(தொடர்புக்கு : லயன் சி.எஸ். நந்தகுமார்-
+91 98413 13109)
