தியாகதுருகம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் நகரில் டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில் மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில்
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாநில பொதுச்செயலாளர் ஜெயபிரகாஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
P.ஆறுமுகம்
மாவட்ட செயலாளர்,
V.காமராஜ்
மாவட்ட தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இதன் நிறுவன தலைவர் மனித நேயர்.
முனைவர்.நா. சு. செல்வராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு கண்டன உரை ஆற்றினார்.

மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு உடனடியாக நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்ய கோரியும். கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்றிட கோரியும்,
தமிழ்நாடு அரசு மாநிலத்தில்
M. R. B,T. R. B.. T. E. T. போன்ற தேர்வுகளை ரத்து செய்து. வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தமிழ் நாடு அரசுப்பணி ஆசிரியர் பணிகளை வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நிரந்தர பணியில் நியமிக்க வேண்டியும்,
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி பயில அரசு கல்வி நிறுவனங்களில் முன்னுரிமை அளிக்க வேண்டும்,
தமிழக அரசு பணிகளில் உள்ள ஆசிரியர் கள்,அரசு அலுவலர்கள், ஊழியர்கள் ஆகியோரின் பிள்ளைகள் அரசுப் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

இறுதியில் கௌதமி அவர்கள் நன்றியுரை நல்கினார்.

மேலும் இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், மகளிரணியினர் கலந்துக் கொண்டனர்.