வள்ளுவர் கோட்டம்:தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்றது.
இவ்விழாவில் ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நாகநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.
தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் நிறுவனத் தலைவர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்ற இவ்விழாவில் கோடைகால வெப்பத்தை தணிக்கும் வகையில் வெள்ளரிக்காய் மற்றும் தர்பூசணி மோர் மற்றும் பழரசங்கள் உள்ளிட்டவைகள் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் 1000க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது. மேலும் இந் நிகழ்வில் இச் சங்கத்தின் துணைத்தலைவர் மாதேஸ்வரன், பொதுச் செயலாளர்.சுரேந்திரன் துணைச் செயலாளர் பச்சையப்பன், திருவள்ளூர் மாவட்ட தலைவர் முருகவேல், பகுதி செயலாளர் முனுசாமி மற்றும் செயற்குழு உறுப்பினர்களான ஸ்ரீநிவாசன். துரைராஜ்,ரவிக்குமார், தினேஷ் பார்த்தசாரதி, ஹரி பாபு,. அஜய்குமார் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


