சென்னை:
அ.இ.அ.தி.மு.க முன்னாள் கழக பொதுச்செயலாளர் சசிகலா அவர்கள் திருச்சி நெம்பர்.1 டோல்கேட் அருள்மிகு உத்தமர் திருக்கோயிலிருந்து தனது ஆன்மீக சுற்றுப் பயணத்தை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் உள்ள பணிரெண்டு திருக்கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தார்…
அப்போது தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவன தலைவரும், காங்கேயம்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தனியரசு சங்ககிரியில் சசிகலா அவர்களுக்கு பிரமாண்ட வரவேற்பு அளித்தார்..
இந்த வரவேற்பின் போது திருச்சி நெம்பர்.1 டோல்கேட் ராணி, சென்னை மறைமலைநகர்
புவனேஸ்வரி,தாழையுத்து நம்பிராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
