குரோம்பேட்டை : முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்காலம் அவர்களின் நினைவு தினத்தை போற்றும் விதமாக தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் சார்பாக உலக தலைவர்களின் அஞ்சல் தலை வெளியீடு நிகழ்வு சென்னை குரோம்பேட்டையிலுள்ள சமூக பாதுகாப்பு அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு தமிழ்நாடு இளைஞர் சங்கத்தின் தலைவர் எம்.எம்.ஆர் மதன் அவர்கள் தலைமை வகிக்க மனித உரிமை செயற்பட்டாளரும் ,சமூக பாதுகாப்பு அமைப்பின் தலைவருமான ஜோசப் இளந்தென்றல் அவர்கள் அஞ்சல் தலையை வெளியிட மதன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

மேலும் இந்நிகழ்வில் டாக்டர். அப்துல் காலம் ஐயா அவர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. அப்துல் கலாம் ஐயா அவர்களுக்கு சென்னையில் அரசு சார்பில் சிலை நிறுவ வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசு பாடத்தில் அவரது வாழ்க்கை வரலாறு குறித்து இடம் பெற வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தமிழ்நாடு இளைஞர் சங்கத்தின் தலைவர் மதன் அவர்களின் முயற்சியை பாராட்டி கலாம் சிற்பி என்கிற விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது..

இந்நிகழ்வில் சமூக பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகிகளான கார்த்திக்குமார், வழக்கறிஞர் யுவராஜ், சாலமன் தினேஷ், ஹரிஹரன், இலக்கியா மற்றும் தமிழ்நாடு இளைஞர் சங்கத்தின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்….