சென்னை:
செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி (St. Joseph’s College of Engineering) மற்றும் செயின்ட் ஜோசப் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (St. Joseph’s Institute of Technology) ஆகியவற்றின் 2025 ஆம் ஆண்டு மாணவர் பிரிவுகளுக்கான பட்டமளிப்பு விழா சென்னை ஓ.எம்.ஆர். கல்லூரி வளாகத்தில்
மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இப்பட்டமளிப்பு விழாக்களுக்கு செயின்ட் ஜோசப் கல்விக் குழுமத் தலைவர் டாக்டர் பாபு மனோகரன் அவர்கள் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குநர் திரு. பி. சசி சேகர் மற்றும் செயல் இயக்குநர் திருமதி ஜெஸி பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விண்டர் (Winter) நிறுவனத்தின் குளோபல் ஹெட் டேலண்ட் அக்விசிஷன் திரு. பார்த்தசாரதி ஆர். மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தின் அகாடமிக் அலையன்சஸ் குரூப் தலைவர் டாக்டர் சுசீந்திரன் கே. எம். ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

பட்டம் பெறும் மாணவர்களிடம் உரையாற்றிய அவர்கள், தொழில்முறை வளர்ச்சி, உருவாகி வரும் புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் தொடர்ந்து கற்றுக்கொள்வதன் அவசியம் குறித்து தங்களின் மதிப்புமிக்க கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். அதன்பிறகு கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பதக்கங்கள். விருதுகள் மற்றும் பட்ட சான்றிதழ்களை வழங்கி அவர்களின் சாதனைகளை கௌரவித்தனர்.

செயின்ட் ஜோசப் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி தனது 11வது பட்டமளிப்பு விழாவை நடத்தி, 2021-2025 கல்வியாண்டு மாணவர் பிரிவை கௌரவித்தது. மொத்தம் 692 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இந்த மாணவர் பிரிவு 39 பல்கலைக்கழக தரவரிசைகளை பெற்றத்துடன், 7 தங்கப் பதக்கங்களையும் 7 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றது. 464 மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். 28 பேர் உயர்கல்வியைத் தொடர்கின்றனர்.
மேலும் 13 பேர் தொழில்முனைவோராக தங்கள் பயணத்தைத் தொடங்கியுள்ளனர். இம்மாணவர் பிரிவுக்கான அதிகபட்ச ஆண்டு சம்பளத் தொகுப்பு 47 லட்சம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.