காட்டாங்கொளத்தூர்:
எஸ்.ஆர். எம் செவிலியர் கல்லூரியில் 9வது மாநில அளவிலான செவிலியத்துறையில் தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம் கல்லூரி வளாக அரங்கில் சிறப்புற நடைப்பெற்றது .

இந்நிகழ்வில் தமிழ்நாடு செவிலியர் கவுன்சில் பதிவாளர் முனைவர் ஆனி கிரேஸ் கலைமதி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்பித்தார். எஸ். ஆர். எம். செவிலியர் கல்லூரி முதல்வர் முனைவர் ஹெலன் ஷஜி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

மேலும் இதில் எஸ். ஆர். எம். பல்கலைக்கழக இணைவேந்தர் பேராசிரியர் முத்தமிழ் செல்வன், எஸ். ஆர். எம். மருத்துவக் கல்லூரி ஆலோசகர்
மருத்துவர் லெப்டினன்ட் கர்னல் இரவிக்குமார், எஸ். ஆர். எம் மருத்துவக்கல்லூரி டீன்
மருத்துவர் நிதின் எம். நகர்கர், எஸ். ஆர். எம் மருத்துவக்கல்லூரி மருத்துவ கண்காணிப்பாளர், மருத்துவர் வெங்கட்ராமன் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் இந்த கருத்தரங்கில் செவிலியத்
துறையில் தொழில்நுட்பத்தை எவ்வாறு உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இந்த கருத்தரங்கில் பல கல்லூரிகளை சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கலந்துக்கொண்டு தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.
இறுதியில் எஸ். ஆர். எம் செவிலியர் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் விஐயலெட்சுமி அவர்கள் நன்றியுரை நல்கினார்.

மேலும் இதில் செவிலியர்கள்,
கல்லூரி மாணவ -மாணவிகள்,
மருத்துவர்கள் உள்பட 480 பேர் கலந்துக்கொண்டனர்.