சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி துறை சார்பில் மாமல்லபுரத்தில் ஜோஸ் ரிசார்ட்டில் வருகின்ற பிப்ரவரி 20 மற்றும் 21 ம் தேதிகளில் சமூக நீதி மாநாடு மற்றும். பயிற்சி பாசறை முகாம் நடைபெறுகிறது.

இந்த நிகழ்வு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி துறை தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார் அவர்கள் சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது :

அகில இந்திய
காங்கிரஸ் எஸ்.சி துறை தலைவர் ராஜேஸ் லிலோத்தியா அவர்களின் அறிவுறுத்திலின்படியும்,
முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அவர்களின் வழிகாட்டுதலின்படியும்,

இந்தியாவில் காங்கிரஸ் கட்சி சுதந்திரத்திற்கு பிறகு 1949 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கல்வியின் நிலை, சட்ட பாதுகாப்பு நிலை குறித்தும் 2014 முதல் 2024 வரையிலான பாஜக. ஆட்சிக் கால கட்டத்தில் நாட்டில் நிலவும் அமைதியின்மை,வேலையின்மை கல்வியின் நிலை ஜாதியால் மதத்தால் பிளவுபடும் சூழல் இவற்றையெல்லாம் குறித்து ஆராய்வதற்காக இந்த பயிற்சி பயிலரங்கு மாநில அளவில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் உள்ள காங்கிரஸ் எஸ்.சி துறை பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

மேலும் இந்த சமூக நீதி மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பார்வையாளர் முகுல்வாசினிக், , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை, தி இந்து நாளிதழ் ஆசிரியர் என்.ராம் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துக்கொள்கின்றனர்.

பாஜகவின் மக்கள் விரோத கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு செல்வதற்காக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாக ஜெய் காங்கிரஸ்- ஜெய் பீம் என்ற முழக்கம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட உள்ளது என அவர் கூறினார்.