சிவகாசி பிரைட் விஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் சிவகாசி பட்டாஸ் நகர் அரிமா சங்கம் சார்பில் சென்னை வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் கண்தான விழிப்புணர்வு முகாம் நிகழ்வு!

சென்னை:
சிவகாசி பிரைட் விஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் சிவகாசி பட்டாஸ்நகர் அரிமா சங்கமும் இணைந்து சென்னை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் வைத்து கண்தான விழிப்புணர்வு முகாம் கல்லூரி வளாக அரங்கில் நடைப்பெற்றது.

இந்த கண்தான விழிப்புணர்வு நிகழ்வில் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர்.சுபாஷினி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஒருங்கிணைப்பாளர் முனைவர்.செல்வராஜ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

மேலும் நிறுவனத்தின்
பேராசிரியை செல்வி.ஷியாமளா மற்றும் பேராசிரியர் முனைவர். ரீட்டா ராணி மண்டால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்நிகழ்வில் சிவகாசி பிரைட் விஷன் சாரிட்டபிள் டிரஸ்ட்டின் நிறுவனரும், சிவகாசி பட்டாஸ் நகர் அரிமா சங்க பட்டயத்தலைவரும், கண்தான மாவட்டத் தலைவரும், உலக சாதனையாளருமான அரிமா. மருத்துவர் ஜே. கணேஷ் M.JF அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்தானத்தின் அவசியம் மற்றும் நன்மைகள் குறித்து சிறப்புரை ஆற்றினார். கண்தானம் பற்றிய குறும்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. கண்தான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் ஸ்டிக்கர்களும் விநியோகிக்கப்பட்டன.

கண்தான மாவட்டத் தலைவர் அரிமா. மருத்துவர் ஜே. கணேஷ் M.JF அவர்கள் கூறுகையில், அகத்துக்கு அழகு அளிப்பவை மட்டுமல்ல கண்கள், உலகத்தை நாம் காண உதவும் அற்புத உறுப்பு. கண்கள் இல்லாத வாழ்க்கை ஓர் இருண்ட உலகம் இத்தகைய இருண்ட உலகில் வாழ்பவர்களுக்கு ஒளி விளக்காக கிடைத்தது தான் கண்தானம். மனிதர்களுக்கு மரணம் உண்டு. ஆனால் கண்களுக்கு மரணம் இல்லை. எனவே மரணத்திற்கு பின் அனைவரும் கண்தானம் செய்யலாம். கண்ணின் கருவிழியின் பாதிப்பால் ஏறக்குறைய 68 லட்சம் இந்தியர் முற்றிலும் கண் ஒளி இழந்துள்ளனர்.

மறைந்தவர் தானமாக அளிக்கும் கண்களைக் கொண்டு இவர்களின் பெரும்பாலோரின் வாழ்வில் ஒளியேற்ற முடியும். ஆனால் நாம் ஆண்டுதோறும் பெரும் கருவிழிகளோ சில ஆயிரங்களோ சமுதாயத்தில் தொடர்ந்து விழிப்புணர்வை அதிகரிப்பதின் மூலம் இத்தகைய கண்தான சேவையை பன்மடங்கு உயர்த்த முடியும் என்றார்.

ஒருவர் கண்தானம் வழங்கிளால் நான்கு நபர்கள் பார்வை பெற முடியும் என்றும் கூறினார். கண்தானத்திற்கு பதிந்து வைக்க தேவையில்லை என்றும் உறவினர்கள் சம்மதம் இருந்தால் கண்தானம் வழங்கலாம் கண்தானம் பெறுவதில், தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. இதற்கு மாணவிகளின் பங்கு அதிகமாக உள்ளது என்று கூறினார்.

இந்த கண்தான விழிப்புணர்வு முகாமில் பயிற்சி ஆசிரியை மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் கண்தான விழிப்புணர்வு பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்த வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தின் மாணவிகளுக்கு பரிசுகள், பிரசுரங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இம்முகாமிற்கான ஏற்பாடுகளை வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தின் பயிற்சி ஆசிரியை மாணவிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

இறுதியில் வெலிங்டன் சீமாட்டி கல்வியியல்
மேம்பாட்டு நிறுவனத்தின் பேராசிரியர் கோமளவள்ளி அவர்கள் நன்றியுரை நல்கினார்.