தமிழக அரசால் அமைக்கப்படவுள்ள விளையாட்டு முனையத்தில் சிவம்பமும் இடம் பெற வேண்டும் என பாரம்பரிய இந்தியன் சிலம்ப கழகத்தின் சார்பாக தமிழக அரசிற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது..
சென்னை :

சர்வதேச சிலம்ப போட்டிகளில் திறன் பட எதிர்கொள்வதற்கான மாவட்ட அளவிலான மாதிரி தொடுதிறன் மற்றும் தனிதிறன் போட்டிகளில் பாரம்பரிய இந்திய சிலம்ப கழகத்தை சார்ந்த மாணவர்கள் 7 தங்கம், 5 வெள்ளி மற்றும் 3 வென்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்,
அதனையொட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பட்டயம் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா சென்னை ஆதம்பாக்கத்தில் நடைபெற்றது…

இந்தியன் சிலம்பம் பள்ளி மற்றும் பாரம்பரிய இந்தியன் சிலம்பம் கழகமும் இணைந்து நடத்திய இந்த சிலம்பம் போட்டி மற்றம் பட்டயம் வழங்கும் விழாவில் பாரம்பரிய இந்தியன் சிலம்ப கழகத்தின் தலைவர் முனைவர்.சிவபாலன், இயக்குனர் வினோதா சிவபாலன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்…

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரம்பரிய இந்தியன் சிலம்பம் கழகத்தின் தலைவர் சிவபாலன் அவர்கள் பேசுகையில்,
தமிழகத்தில் விளையாட்டு முனையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது விளையாட்டு விரர்களுக்கு பெரிய ஊக்கத்தினை உருவாக்கும் எனவும், அந்த விளையாட்டு முனையத்தில் பாரம்பரிய கலைகளில் ஒன்றான சிலம்பமும் இடம் பெற செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்…