கிங்மேக்கர்ஸ் பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன அலுவலக ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்வு

வளசரவாக்கம் :
கிங்மேக்கர்ஸ் பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் நிறுவனத்தில் பணியாற்றும் அலுவலக ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி வளசரவாக்கத்தில் உள்ள கிங்மேக்கர்ஸ் பிராப்பர்டீஸ் தலைமை அலுவலகத்தில்
கிங்மேக்கர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவருமான முனைவர் எஸ்.ராஜசேகர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மேலும் இந்த நிகழ்வில் தனது அலுவலகத்தில் பணிபுரியும் நிர்வாக ஊழியர்கள் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவு ஊழியர்கள் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்டோருக்கு தீபாவளி பரிசு பொருடகள் வழங்கினார்.

