திருவொற்றியூர் : ஜுன், 23
கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருவொற்றியூர் மண்டலம் – 1ல் மாநகராட்சி களப்பணியாளர் களுக்கான கலந்தாலோசனை கூட்டம் திருவொற்றியூர் மண்டல சிறப்பு அதிகாரி சுதன் ஐ.ஏ.எஸ் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

இதில் பேரிடர் மேலாண்மை மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு மாநகராட்சி களப்பணியாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும் திருவொற்றியூர் மண்டலத்தில் பணிபுரியும் மாநகராட்சி சுகாதார களப்பணியாளர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் கருவி, ஆக்சிஜன் கண்டறியும் கருவி மற்றும் கபசுர குடிநீர் பாக்கெட் போன்றவற்றை வழங்கினார்.

இந்த கலந்தாலோசனை கூட்டத்தில் திருவொற்றியூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன்,காவல் துறை உதவி ஆணையர் ஆதிமூலம், மருத்துவர்கள் இளஞ்செழியன், மாலதி, திருவொற்றியூர் மண்டல அதிகாரி பால் தங்கத்துரை அகியோர் உடனிருந்தனர்.

இந்த கலந்தாலோசனை முடிவில் மேலும் ஒரு நிகழ்வாக முன்னாள் எம்.எல்.ஏ கே.குப்பன் அவர்களின் ஏற்பாட்டில் பிராமண சமுதாயத்தை சேர்ந்த அர்ச்சகர்கள் 50 பேர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் வழங்கினார்.

அதிமுக நிர்வாகிகளான கே.கிருஷ்ணன், பி.ராஜேந்திரன், இ.வேலாயுதம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.