சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் மருத்துவத்துறை பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைப்பெற்றது.

இதில் நவீன அறிவியல்
மருத்துவத்தை காத்திட, மருத்துவக் கல்வியில்,சேவையில் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்திட, மருத்துவக் கல்வி மற்றும் சேவையில் இந்தி சமஸ்கிருதம் மற்றும் இந்துத்துவா கருத்தியல் திணிப்பை தடுத்திட, மருத்துவக் கல்வியில்,மருத்துவ சேவையில் சமூக நீதியை காத்திட, அனைவருக்கும் தரமான இலவச மருத்துவ சிகிச்சையை உறுதி செய்திட , மருத்துவர்கள், மருத்துவ மாணாக்கர்கள்  , மருத்துவத்துறை பணியாளர்களின் உரிமைகளை மீட்டெடுத்திட, அனைவருக்கும் நலவாழ்வை அடிப்படை உரிமையாக்கிட, ஒன்றிய பாஜக அரசை,ஆட்சியை விட்டு அகற்றிட வேண்டும்.இந்தியா கூட்டணியை வெற்றிபெறச் செய்திட வேண்டும் என்று சமூக  சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் மருத்துவ துறை பணியாளர்கள் கூட்டமைப்பு வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

மேலும் இது குறித்து இச்சங்கங்களின் சார்பில்  நிர்வாகி பேசுகையில்,

ஒன்றிய அரசின் ஆட்சி பொறுப்பை ஏற்றதிலிருந்து, மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு,  மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ சேவைகளை கார்ப்பரேட் மயமாக்கிவருகிறது. தனியார் மயமாக்குகிறது. பொது சுகாதாரத்துறையை வலுவிழக்கச் செய்கிறது.அரசு மருத்துவமனைகளை தனியாருக்கு வாரி வழங்குகிறது.

மருத்துக் கல்வியும்,மருத்துவ சிகிச்சைகளும் ஏழைகளுக்கு எட்டாக் கனிகளாக மாறிவிட்டன.

நவீன அறிவியல் மருத்துவத்தில், மூடநம்பிக்கைகளை புகுத்துகிறது. ஜோதிட மருத்துவம் ,ஆன்மீக மருத்துவம் என , அறிவியலுக்குப் புறம்பான மருத்துவ முறைகளை நவீன அறிவியல் மருத்துவத்தோடு இணைக்க முயல்கிறது.

கி.பி 2030 ல் “ஒரே தேசம் ஒரே மருத்துவமுறை”one nation one med system என்ற திட்டத்தை நடைமுறை படுத்த மோடி அரசு முயல்கிறது.

அதாவது, ஒரே மருத்துவ முறை என்ற பெயரில் , நவீன அறிவியல் மருத்துவத்திற்கும்,அறிவியல்  சிந்தனைப் போக்கிற்கும்,
அறிவியல் ரீதியான உலகப் பார்வைக்கும், சாவு மணி அடிக்க முயல்கிறது.

அத்தகைய நோக்குடன்,

  • பொதுவான அடிப்படை மருத்துவப் பாடத்திட்டம் (Common Foundation Medical Course)…
  • ஒருங்கிணைந்த மருத்துவ முறை (Integrated Medicine) …
  • கலப்பு மருத்துவம் (Mixopathy )…
  • ஆன்மீக மருத்துவம் (Spiritual Medicine)…
  • ஜோதிட மருத்துவம்( astrological medicine)

போன்றவற்றை
கொண்டுவர முயல்கிறது.

இந்தி – சமஸ்கிருத திணிப்பு மற்றும் இந்துத்துவா கருத்தியல் போன்றவற்றை மருத்துவக் கல்வியிலும் ,மருத்துவ சேவையிலும் திணிக்கிறது. தடுப்பூசி திட்டத்திற்கு
” இந்திர தனுஷ்” எனப் பெயரிடப்பட்டதும், “ஆயுஷ்மான ஆரோக்கிய மந்திர்” என ஆரம்ப சுகாதார நிலையங்களின் பெயர்களை மாற்ற முயல்வதும் ,”ஆயுஷ்மான பாரத் ”  ஊட்டச் சத்து திட்டத்திற்கு ‘ போஷன் அபியான்” , என மருத்துவத் திட்டத்திற்கு பெயர் சூட்டியிருப்பதும் இதற்கு உதாரணங்களாகும்.

இவை நாட்டின் ஒற்றுமை ஒருமைப் பாட்டிற்கும், மதச்சார்பின்மைக்கும், மக்களின் நலன்களுக்கும், மருத்துவ அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கும் ,எதிரானதாகும்.

நவீன அறிவியல் மருத்துவத்தை “காவி மயமாக்கும்”  முயற்சியாகும். மருத்துவக் கல்வி மற்றும் சேவையின் மதச்சார்பற்ற தன்மையை சீர்குலைக்கும் நடவடிக்கையாகும்.

எனவே,  நவீன அறிவியல் மருத்துவம்”  என்ற அழகிய மாலையை…

பல்லாயிரம் ஆண்டு கால மானுட உழைப்பின் உன்னத படைப்பை …
பல் துறை அறிவியல்  வளர்ச்சியின் மணிமகுடத்தை  காப்பது நமது தலையாய கடமையாகும்.

ஆயுஷ்மான்  பாரத் திட்டத்தின் பிரதமர் காப்பீடு திட்டத்திலும் மிகப் பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. அது ,ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் இலவச சிகிச்சை பெறுவதை தடுத்துள்ளது.

எனவே, இந்தியா கூட்டணியை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென வாக்காளப் பெருமக்களை கேட்டுக் கொள்கிறோம்.

அது மட்டுமன்றி, மருத்துவக் கல்வியில், மருத்துவச் சேவையில் மாநில உரிமைகளை ,ஒன்றிய பாஜக அரசு பறித்துவிட்டது. அதை மீட்டெடுக்க வேண்டும்.

நெக்ஸ்ட்(NExT) என்ற தேசிய தகுதித்தேர்வை  மருத்துவப் படிப்பில் திணிக்க முயல்கிறது. இந்த “நெக்ஸ்ட் (NExT step one) ” தேர்வை இறுதி ஆண்டு மருத்துவத் தேர்விற்கு பதிலாக கொண்டுவருகிறது. இத்தேர்வில் வெற்றி பெற்றால் தான் பயிற்சி மருத்துவராக முடியும். பயிற்சி மருத்துவத்தை ( CRRI) முடித்தவுடன், ,நெக்ஸ்ட் இரண்டாம் கட்டத் தேர்வை (NExT step 2) எழுதிட வேண்டும். இத்தேர்வால்

மாணவர்களின் ,சிகிச்சை வழங்கல் கற்றல்  (Clinical Knowledge) வெகுவாக குறையும். மருத்துவர்களின் தரம் குறையும்.இந்த தேர்வு மாணவர்களுக்கு கூடுதல் சுமையாகும். எனவே, இந்த நெக்ஸ்ட் தேர்வை தடுத்து நிறுத்திட வேண்டும். இறுதி ஆண்டு மருத்துவத் தேர்விற்குப் பதிலாக கொண்டுவரப்படும் “நெக்ஸ்ட் “முதல் கட்டத் தேர்வையே, எம்.பி.பி.எஸ் படிப்பில் தேர்ச்சி பெறுவதற்கான தேர்வாகவும்(Qualifying Examination)  ,முதுநிலை மருத்துவக் கல்வியில் சேர்வதற்கான போட்டித் தேர்வாகவும் (அதாவது தற்போது நடைபெறும் NEET PG  தேர்வுக்குப் பதிலாக),வெளிநாட்டிலிருந்து படித்துவிட்டு வரக்கூடிய மருத்துவர்களுக்கான தகுதி தேர்வாகவும் மாற்றுவது(அதாவது தற்போது நடைபெறும் FMGE தேர்வுக்கு பதிலாக ) பல்வேறு குழப்பங்களை உருவாக்கும் . மேலும் இத்தேர்வு, எம்பிபிஎஸ் தேர்ச்சிக்கான தகுதித் தேர்வை கடினமாக்குவதோடு, முதுநிலை மருத்துவ படிப்புக்கான போட்டித் தேர்வையும் கடினமாக்குகிறது . இது மாநில பல்கலைக் கழகங்களின் உரிமைகளுக்கு எதிரானது.
எனவே ,இத்தேர்வு திணிப்பை முறியடிக்க வேண்டும்.

அதே போல், நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானதாகும். நீட் தேர்வில் இருந்து மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள இளநிலை, முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவ  இடங்களுக்கு விலக்கு பெற்றாக வேண்டும்.

மருத்துவ மாணாக்கர்களின்,கல்வி கற்கும்  சூழலை,கல்வித் தரத்தை, விடுதி வசதிகளை மேம்படுத்திட, அவர்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்திட வேண்டும்.

வெளிப்படைத் தன்மையுடன், தகுதி மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில், நேர்மையான முறையில் இளநிலை, முதுநிலை, உயர் சிறப்பு மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை நடைபெறுவதை உறுதி செய்திட வேண்டும்.

எம்.பி.பி.எஸ் மருத்துவ இடங்களை தேசிய மருத்துவ ஆணையம்(NMC) குறைப்பதை தடுத்திட வேண்டும்.

மாநில அரசுகளின் மருத்துவ இடங்களுக்கும் ஒன்றிய பாஜக அரசே ,ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கையை நடத்த முயல்வதை தடுத்திட வேண்டும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகள்,நிகர்நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்களின் 100 விழுக்காடு இளநிலை,முதுநிலை, மற்றும்  உயர்சிறப்பு மருத்துவ இடங்களுக்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகளே நியாயமான முறையில் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கச் செய்திட வேண்டும்.

ஏழை மாணவர்களின்  கல்வி,விடுதி,உணவு ,கலந்தாய்வு ,விண்ணப்ப மற்றும்  அனைத்துக் கட்டணங்களையும் அரசே ஏற்றிட வேண்டும்.

வேலைக்குச் சென்ற பிறகு ,

கடனை திருப்பிச் செலுத்தும் வகையில்,மாணவர்களுக்கு வட்டி இல்லாத கல்விக் கடன்களை வழங்கிட வேண்டும்.

அனைத்து கல்விக் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும்.

கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதை தடுத்திட வேண்டும்.

கட்டாய நன்கொடை தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்தி, முறையாக நடைமுறைப்படுத்திட வேண்டும்.

அனைவருக்கும் தரமான,இளநிலை, முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவக் கல்வி இலவசமாய் கிட்டிட வேண்டும்.

  # மருத்துவப் படிப்புகளில் நாடு முழுவதும் அரசு பள்ளிகள்,அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், தனி இட ஒதுக்கீட்டை  7.5 விழுக்காடு முதல் 10 விழுக்காடு வரை  வழங்கிட வேண்டும்.

ஏழை மாணவர்களுக்கு, வட்டாரம் தோறும் இலவச உறைவிட மற்றும் உணவு வசதியுடன் கூடிய நீட் மற்றும் இதர போட்டித் தேர்வுகளுக்கான தரமான பயிற்சி மையங்களை

உருவாக்கிட வேண்டும்.

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை விரைவாக மேற்கொள்வதோடு, அந்நிறுவனத்தின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தமிழ்நாட்டினருக்கு 65% இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும்.

அனைவருக்கும் ,இலவச மருத்துவ சிகிச்சையை, நலவாழ்வை உறுதி செய்திட வேண்டும்.

அனைவருக்கும் நலவாழ்வை அடிப்படை உரிமையாக்கிட வேண்டும்.

அனைவருக்கும் கல்வி மற்றும் வேலை என்பதை அடிப்படை உரிமையாக்கிட வேண்டும்.

மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை , மொத்த தேசிய உற்பத்தியில் ஆறு விழுக்காடாக ஒன்றிய – மாநில அரசுகள் உயர்த்திட வேண்டும்.இதில் ஒன்றிய அரசு தனது பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்.

அனைத்து மருத்துவர்களுக்கும்,மருத்துவப் பணியாளர்களுக்கும் நிரந்தர அரசு வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும்.

ஒப்பந்தம்,தற்காலிகம்,அவுட் சோர்சிங் அடிப்படையிலான பணிநியமனங்களை,மருத்துவத் துறையில் முற்றிலும் ஒழித்துக் கட்டிட வேண்டும்.

அனைத்து தற்காலிக,ஒப்பந்த பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும். சம வேலைக்கு சம‌ஊதியம் வழங்க வேண்டும்.

ஆஷா தொழிலாளர்களுக்கு,ஊக்கத்தொகையோடு  மாத ஊதியமாக ரூ 26,000 வழங்கிட வேண்டும்.

தேசிய சுகாதார இயக்கத்தில் (NHM)  பணி புரியும், அனைவருக்கும்  சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் .அவர்களது பணியை நிரந்தரமாக வேண்டும். மத்திய – மாநில அரசுகள் சார்பில் செய்யப்படும் அனைத்துப்  பணி நியமனங்களிலும்  இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்பட வேண்டும்.

மருத்துவக் கல்வி மற்றும் சேவை கார்ப்பரேட் மயமாவதை, தனியார் மயமாவதை, வணிகமயமாவதை தடுத்திட வேண்டும்.

அனைவருக்கும் தரமான இலவச மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும்.

மாவட்ட அரசு மருத்துவமனைகளை தனியாருக்கு வழங்கி , பொது தனியார் பங்களிப்பு மூலம் (PPP model ) மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படுவதை தடுத்திட வேண்டும்.

ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம் போன்ற அரசு

மருத்துவ நிறுவனங்களை தனியாருக்கு தாரை
வார்க்கக்கூடாது.

  இளநிலை மருத்துவ மாணவர்கள் சில குடும்பங்களை தத்தெடுக்க வேண்டும் (  Family Adoption program)என்ற NMC – என்.எம்.சி யின்  திட்டத்தை தடுத்து நிறுத்திட வேண்டும்.

முதுநிலை மருத்துவப் படிப்பின்

பொழுது , மாணவர்கள் மூன்று மாதம் மாவட்ட மருத்துவமனைகளில் கட்டாயம் பணியாற்ற வேண்டும்
(District Residency Program) என்பது இளம் மருத்துவர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் நடவடிக்கையாகும். மருத்துவ கல்வியின் தரத்தையும் குறைத்து விடும்.இத்திட்டத்தை ரத்து செய்திட வேண்டும்.

வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பை படிக்கும் மாணாக்கர்களின் ( FMGs) நலன்களை பாதுகாத்திட வேண்டும்.

மாநில உரிமைகளுக்கும், கூட்டாட்சி கோட்பாட்டிற்கும் எதிரான,ஊழலும் ஏதேச்சதிகாரமும் மிகுந்த,தேசிய மருத்துவ ஆணையம்(NMC) மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

சிறு,குறு மற்றும் நடுத்தர மருத்துவ மனைகளை,நிறுவனங்களை,

கிளினிக்குகளை பாதுகாத்து, அவற்றை ஊக்கப்படுத்திட வேண்டும்.

தாழ்த்தப்பட்ட, பழங்குடி ,பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள் என அனைவருக்கும் சமூக நீதி கிடைக்கும் வகையில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்றப்பட வேண்டும்.அவர்கள் தொழில் தொடங்குவதற்கு தேவையான வசதி வாய்ப்புகளை செய்து தர வேண்டும். நீண்ட காலமாக உள்ள SC/ST/OBC backlog vacancy பணி இடங்களுக்கு உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும்.

மோடி அரசின், தேசிய கல்விக் கொள்கை 2020 (National Education Policy) யை திரும்பப் பெற வேண்டும்.அதை அமல் படுத்தக் கூடாது. சமூக நீதி , மாணவர்கள் நலன்,மதச்சார்பின்மை ,ஜனநாயகம்,அறிவியல் மனப்பான்மை  மற்றும் மாநில உரிமைகள் காக்கப்படும் வகையில் புதிய கல்விக் கொள்கையை, மாநில அரசுகளையும்,மாணவர் மற்றும் இதர அமைப்புகளையும் கலந்து ஆலோசித்து உருவாக்கிட வேண்டும்.அது அனைவருக்கும் இலவச கல்வியை உறுதி செய்ய வேண்டும்.

பிறக்கும் குழந்தைகளின் தாய் மற்றும் தந்தையின் மதங்களை  தனித்தனியே பதிவு செய்ய வேண்டுமென ஒன்றிய பாஜக அரசு மதவாத அரசியல் உள்நோக்கத்தோடு ஆணையை தற்போது பிறப்பித்துள்ளது. இது திரும்பப் பெறப்பட வேண்டும்.

தவறான, மக்கள் விரோத கொள்கைளை , நலவாழ்வுத்துறையில்  கடைபிடித்துவரும் ,ஒன்றிய மோடி அரசை, ஆட்சியை விட்டு அகற்றிட வேண்டும் .

மருத்துவர்கள் ,மருத்துவ மாணவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் நலன்களை பேணக்கூடிய, நாட்டின் ஜனநாயகம்,
மதச்சார்பின்மை,அரசியல் சட்டம்  மற்றும் நாட்டின்  ஒற்றுமை ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் வகையில் , மக்கள் நலன் சார்ந்த மாற்று கொள்கையுடன் கூடிய அரசை இந்தியாவில் உருவாக்க வேண்டும்.

அதற்கு,  இந்தியா கூட்டணியை தமிழ்நாட்டு மக்களும் மருத்துவர்களும், மருத்துவத்துறை பணியாளர்களும் , நடைபெற உள்ள மக்களவை பொதுத் தேர்தலில் ஆதரிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள ,காங்கிரஸ்,தி.மு.க,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற கட்சிகள் ,மாணவர்கள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நிறைவேற்றுவதாக ,அதற்காகப் போராடுவதாக பல வாக்குறுதிகளை , தங்களது தேர்தல் அறிக்கைகளில் அளித்துள்ளன.

மாநில அரசுகளின் இடங்களுக்கு நீட்,கியூட் விலக்கு,மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ,கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு ,
NMC சட்டத் திருத்தம், தேசிய கல்விக் கொள்கை ரத்து, ஒப்பந்த பணிநியமனம் ரத்து, வேலை வாய்ப்பு அதிகரித்தல், முறையான இட ஒதுக்கீடு வழங்குவது ,தொழிலாளர் நலன் பாதுகாத்தல், மாநில உரிமைகளை வழங்குதல்,அறிவியல் மனப்பான்மை வளர்த்தல், கல்விக் கடன் ரத்து,
ஆஷா, அங்கன்வாடி ஊழியர்களுக்கு சிறப்புத் திட்டங்கள் போன்ற பல வாக்குறுதிகளை தந்துள்ளன. அதை மனமார வரவேற்கிறோம்.

இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில், மருத்துவத்துறை பணியாளர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி, தலைவர் பி.காளிதாசன், பாரா மெடிக்கல் கல்வி மற்றும் நலச்சங்கத்தின் மாநில துணைத் தலைவர்கள் எஸ்.தனவந்தன், எஸ்.சரவணன், கே.ராஜ்குமார்,டி.நந்தக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இவண்,
டாக்டர் ஜி. ஆர்.இரவீந்திரநாத் பொதுச் செயலாளர்,
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
டாக்டர் ஏ.ஆர்.சாந்தி,
பொதுச் செயலாளர் ,
தமிழ்நாடு மருத்துவத் துறை பணியாளர்கள் கூட்டமைப்பு.

தொடர்புக்கு
9940664343
9444181955