மக்கள் உரிமை
நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய -மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்!
கல்லைக்குறிச்சி:
மக்கள் உரிமை
நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் கல்லைக்குறிச்சி அம்பேத்கர் சிலை அருகில் நடைப்பெற்றது.
மாநில அமைப்பு செயலாளர் ஆர். சதீஷ்குமார் அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்,
மாநில பொதுச்செயலாளர் ஏ.டி.சக்திவேல் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் டி. கந்தநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்ட
நிறுவன பொதுச்செயலாளர் என். எஸ்.செல்வராஜ்,
மாநில தலைவர் பி. ஜெயபிரகாஷ்,
மாநில பொதுசெயலாளர்
பி.குமார் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்
மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் வன்முறையை மத்திய அரசு உடனே தடுத்து நிறுத்திட வேண்டும், அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை உடனே அமல்படுத்த வேண்டும்,
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிகளை உடனடியாக திறந்து ஏழை, எளிய மக்களுக்கு தரமான கல்வியை வழங்க வேண்டும், இதற்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு
நல்கிட வேண்டும், தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்திட வேண்டும்,
தமிழ்நாடு அரசின் கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும்,
தகுதியான ஆசிரியர்களை கொண்டு உடனடியாக நிரப்பிட வேண்டும், தமிழ்நாடு அரசின் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் ஓய்வுபெற்ற மருத்துவர்களை பணி
நியமனம் செய்வதை கைவிட்டு தகுதியான மருத்துவர்களுக்கு பதவி உயர்வு வழங்கிடவும், அதன் மூலம் ஏற்படும் காலி பணியிடங்களில் தகுதி வாய்ந்த புதிய மருத்துவர்களை பணி நியமனம் செய்திட வேண்டும். தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறியதைப்போல அனைத்து அரசு அலுவலகங்களிலும் தற்காலிக. ஒப்பந்த வெளிக்கொணர்தல் முறைகளில் பணி நியமனம் செய்வதை கைவிட்டு நிரந்தர பணியாளர்களாக
பணிநியமனம் செய்திட வேண்டும், தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களிலும் தகுதியான தமிழ்நாடு
இளைஞர்களை கொண்டே நிரப்பிட வேண்டும்,
கல்லைக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கட்டிடத்தை உடனடியாக கட்டி முடித்து உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும், கல்லைக்குறிச்சி – சின்னசேலம் தொடர்வண்டி திட்டத்தை உடனடியாக முடித்து தொடர்வண்டி நிலையத்தை ஏற்கனவே திட்டமிட்டபடி தியாகதுருகம் சாலையிலேயே அமைத்திட வேண்டும் ஆகிய
கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.
மேலும் இதில் எஸ். கல்யாணசுந்தரம், பி. எஸ். .ரமேஷ், எம். செங்கான், பி. ஆறுமுகம்,கே. ஆறுமுகம்,
வி. .காமராஜ்,
மைக் சேகர், மோதிலால் சிங்,
சி. கோவிந்தசாமி
பி. கோவிந்தராஜ்,
பி..தவமணி கே. மாரிமுத்து, சி. பூசமணி எல். அண்ணாதுரை, எஸ். இராஜேந்திரன்,எம் முருகன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
இறுதியில் மாநில துணை தலைவர் வி. பன்னீர் செல்வம் அவர்கள் நன்றியுரை நல்கினார்.
|
