சென்னை :அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சென்னை கொளத்தூரில் இச்சங்கத்தின் தலைவர் கே. கனகராஜ் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அகில இந்திய ஓய்வூதியர்கள் அனைவருக்கும் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்ககோரியும், நீண்ட கால கோரிக்கையான ஓய்வூதிய உயர்வை அமல்படுத்தாவிட்டால் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் கட்சிக்கு வாக்களிக்க போவதிலை என்றும், சுவரொட்டி விளம்பரம் செய்வது என்றும், இதை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருப்பது குறித்தும் தீர்மானிக்கபட்டது.

மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் இச்சங்கத்தின் பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை பொதுச்செயலாளர் பரமசிவம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
