திருநாவலூர்:
மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு
மையத்தின் மகளிரணி சார்பில்
சர்வதேச மகளிர் தினம்
ஐ. கௌதமி தலைமையில் கல்லக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் சிவன் கோவில் அருகில் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் இம்மையத்தின்
நிறுவனர் பொதுச்செயலாளர் நா. சு. செல்வராஜ் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரை வழங்கினார்.

மேலும் இவ்விழாவில்
தமிழகத்தில் பாலியல் குற்றவாளி களுக்கு மரண தண்டனை அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இறுதியில் வி. மல்லிகா நன்றியுரை நல்கினார் .

மேலும் இதில் திருநாவலூர் கிளை நிர்வாகிகளாக
தலைவர் வி. மல்லிகா, துணை தலைவர் எஸ். விஜயலட்சுமி,
செயலாளர் வி. சசிரேகா,
துணை செயலாளர் வி. பழனியம்மாள்,
பொருளாளர் எம். அமுதலட்சுமி ஆகியோர்
தேர்வு செய்யப்பட்டனர்.