சென்னை:அடையாறு காந்தி நகரில் அமைந்துள்ள டாக்டர் மீனா முத்தையா அவர்களால் நிறுவப்பட்ட குமாரராணி மீனா முத்தையா மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் கல்லூரி, ஏழை, எளிய மாணவர்களை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட பள்ளி இப்பொழுது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.ஐயப்பன் என்கிற எம்.ஏ.எம். ஆர். முத்தையா சட்டவிரோதமாக நிறுவனத்தைக் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அறக்கட்டளையிலிருந்து டாக்டர் மீனா முத்தையா அவர்களை நீக்கி விட்டு, பள்ளியையும், கல்லூரியையும் ஒரு வருடம் நடத்தி வந்தார்.

பின்னர் அவர் இப்பள்ளியை தனியாருக்கு விற்றதாக பள்ளி நிர்வாகம் கூறுகிறது. தற்போது அவர் பள்ளி வளாகத்தை இடிக்க போவதாக தகவல்கள் வெளியாகின்றன.

இந்த ஒப்பந்தத்தில் டாக்டர் மீனா முத்தையாவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை.அய்யப்பனின் செயல்கள் தெளிவான நம்பிக்கை மீறலாகும்.

எளிய மாணவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாகி உள்ளது.

இந்த பள்ளி நிறுவனத்தையும் அதன் நோக்கத்தையும் பாதுகாக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.