சென்னை: மே,10
மாறா அக அன்புடன் சமூக மாற்றத்தை கொள்கையாக கொண்டு தூய்மை உள்ளத்தோடு நேர்த்தியாக நற்பணிகள் மேற்கொண்டு வரும் சாதனையாளர், சமூக நற்பணியாளர் திரு.குமரன் சண்முகநாதன் அவர்கள் இவர் ஒரு தேசிய விருது, இரண்டு சர்வதேச விருது, உலக சாதனை விருது என பல விருதுகளுக்கு சொந்தகாரர் ஆவார். காந்தி விருது மற்றும் Man of perfection உள்ளிட்ட விருதுகள் இவர் பெற்றதில் குறிப்பிடத்தக்கது…

SAS CHARITABLE TRUST
(மாறா அகத்தூய்மை அறக்கட்டளை) என்ற பெயரில் தொண்டு நிறுவனம் அரம்பித்து அதன் நிறுவனராகவும் செயல்பட்டு வருகிறார்.இவரது அலுவலகம் சென்னை பல்லாவரத்தில் இயங்கி வருகிறது.இந்த அறக்கட்டளையானது 2012 ஆம் ஆண்டு முதல் தனது சமூக சேவையை செவ்வனே செய்து வருகிறது.

கிராமப்புறங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்கள், ஆதரவற்றோர் காப்பகங்களில் இருக்கும் குழந்தைகள் மற்றும் முதியோர்கள், இருளர் இன மக்கள் என்று பலதரப்பட்ட மக்களின் தேவைகளை கண்டறிந்து அதற்கேற்ற தொகையை கணக்கிட்டு, அத்தொகையை பெற்று அவர்களுக்கு உதவி செய்து வருகிறது.

இவர்களது நோக்கம் :
அரசுப்பள்ளி மாணவர்களின்கல்வி தரத்தை உயர்த்துதல்,
கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல்,
ஆதரவற்றோர் இல்லங்களில் வாழும் குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு உதவி செய்தல், சாலையோரம் வாழும் ஏழை எளிய மக்களுக்கு உணவு அளித்தல், போன்றவையாகும்.
கூடுதல் சேவையாக
செங்கல்பட்டு அருகே பொன்விளைந்த களத்தூரில் உள்ள அருள்மிகு வள்ளலார் தருமசாலைக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்வதற்காக, அறக்கட்டளையின் மூலமாக மாதம் தோறும் 10 மூட்டை அரிசி தானமாக வழங்கப்படுகிறது.

இவர்களது நற்பணியில்
இதுவரை இந்த அறக்கட்டளையின் 75 மகத்தான சேவைகளின் மூலமாக சுமார் 4000 மாணவர்களும், 1000 ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களும் பயனடைந்துள்ளனர்.

கொரோனா பெரும் தொற்று பாதிப்பால் பொது ஊரடங்கு தடை உத்தரவின் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும்,நாட்டுப்புற கலைஞர்கள்,
இருளர் இன மக்கள்,
பழங்குடியின மக்கள்,
ஏழை, எளிய மக்கள்,
தினக்கூலி செய்பவர்கள், மாற்றுத்திறனாளிகள்,
கணவனை இழந்த பெண்கள்,
என்று இதுவரை
45 கிராமங்களில் உள்ள
2550 குடும்பங்களுக்கு
நிவாரண உதவிகளை செய்துவருகின்றனர்.

மனிதநேயம் வளர்ப்போம் !
மனிதம் காப்போம் !!
மனிதம் ஒன்றே தீர்வாகும் !!! என்ற வரிகளே இவர்களது தாரக மந்திரமாகும்…

மனிதத்தின் ஆயுளை இவர் போன்றோர்களே நீள செய்கின்றனர்…. என்பதே நிதர்சனமான உண்மை உண்மை…