கும்பகோணம்:
டெல்டா மாவட்டமான தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியிலுள்ள தாஜ்மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நமது தேடல் பத்திரிக்கை நாளிதழ் 13 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும்
என்டி டிவி தொலைக்காட்சியின் லோகோ அறிமுக விழா மிக சிறப்பாக நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் பத்திரிக்கைகளின் சிறப்பு அதனுடைய தனித்துவம் மற்றும் பத்திரிக்கை துறையின் இன்றைய காலகட்டத்தில் முக்கிய செயல்பாடுகள் அதுமட்டுமில்லாமல் பத்திரிகை துறையால் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் சமூக மாற்றத்திற்கும், சமூக நீதியை நிலைநாட்டிட பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் அர்ப்பணிப்பு போன்ற பல்வேறு ஆக்கப்பூர்வமான கருத்துக்களை பதிவு செய்து நமது தேடல் பத்திரிகை தின நாளிதழ் 13 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் புதிதாக உதயமான என்டிடிவி தொலைக்காட்சி லோகோ அறிமுக விழாவானது மிக எழுச்சியுடன் நடைபெற்றது.

இதில் எ. சௌகத் அலி
துணை ஆசிரியர்,
எஸ். சையத் யாசர் அரபாத்
கௌரவ ஆசிரியர் மற்றும்
எம். சாந்தகுமார்
பொறுப்பாசிரியர் ஆகியோர் தலைமை வகிததனர்.

எ. ஹாஜா நஜ்முதீன் அவர்கள்
(தஞ்சை மண்டல செய்தியாளர்) வரவேற்புரை ஆற்றினார்.

புலவர் இரா. பாலசடாட்சரம் அவர்கள்
(மூத்த பத்திரிகையாளர்) முன்னிலை வகித்தார்.

எம். ஜாகிர் உசேன் மேலாளர், அலிமா குரூப்ஸ்,கே.நசீர் முகமது தலைவர்
முஜிபுர் ரஹ்மான்
தாஜ் திருமண மஹால்,
ஆடுதுறை ஷாஜகான்
செயலாளர் அஸ்ஸலாம் பொறியல் கல்லூரி ,எஸ்.எம்.அப்துல் ரகுமான் தாளாளர் ஸ்டார் மெட்ரிகுலேஷன் ஸ்கூல் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் இந்நிகழ்வில்
தமிழ்ப்புலிகள் கட்சி
நாமக்கல் மாவட்டச்செயலாளர்
டாக்டர் த.குமரவேல் மற்றும் மக்களாட்சி கட்சி
மாநில துணை தலைவர் நாகை வீ. துரை ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

இறுதியில் தலைமைச் செயலக செய்தியாளர் டாக்டர்.சுடர். முத்துக்குமரன் அவர்கள் நன்றியுரை நல்கினார்.