சென்னை :
இந்தியன் ஃபோரம் அமைப்பு சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு ஞானரத்னா மற்றும்
சேவாரத்னா விருதுகள் வழங்கும் விழா சென்னை, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் உள் அரங்கத்தில் நடைப்பெற்றது.

இந்த விருது வழங்கும் விழாவில் தமிழ்நாடு நீதித்துறை முன்னாள் நீதிபதி டாக்டர் கே. வெங்கடேசன் , தமிழ்நாடு வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா,முன்னாள் நீதிபதிகள் ஏ. திருநீல பிரசாத் ,எஸ்.முருகேசன் ,முன்னாள் காவல்துறை ஐஜி ராமசுப்பிரமணி ஐபிஎஸ், நாட்டுப்புறப் பாடகர் கலை மாமணி டாக்டர் புஷ்பவனம் குப்புசாமி, டாக்டர் அனிதா குப்புசாமி திரைப்பட தயாரிப்பாளர் கேஆர் ,இந்தியன் ஃபோரம் விருதுகள் துணைத் தலைவர் ராஜ்மோகன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரேணுகாதேவி, அண்ணாமலை பல்கலைக்கழக டீன் டாக்டர் வி. அம்பேத்கர், மாவட்ட முதன்மை வன பாதுகாப்பு அதிகாரி நாகநாதன் ஐஎப்எஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

                                                                                                                  மேலும் இந்தியன் ஃபோரம் அமைப்பின் சார்பில்  பிரைட் ஆஃப் இந்தியா மிஸஸ் இந்தியா-2025 அழகி போட்டியில் வென்று மகுடம் சூடிய தமிழ்நாட்டை சேர்ந்த சோபனா அவர்களுக்கு சிறந்த பெண் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

மேலும் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
சென்னையை சேர்ந்த அம்மா மற்றும் மகள் இருவரும் இணைந்து இந்திய அழகி போட்டியில் கலந்து கொண்டு மிஸஸ் இந்தியா 2025 ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளோம்.
சென்னை ஈ.சி.ஆர். உத்தண்டி பகுதியை சேர்ந்தவர் ஷோபனா, இவர் செம்மஞ்செரியில் உள்ள அதீனா குளோபல் பள்ளியில் பணியாற்றி வருகின்றார். இவரது மகள் மெர்சி லிண்டா 9ம் வகுப்பு படித்து வருகின்றார்.

இந்நிலையில் ஷோபனா அவர்களுக்கு திருமணத்திற்கு பின்னரும் அழகி போட்டியில் கலந்து கொள்ள்வேண்டும் என்கிற ஆர்வத்கை தொடர்ந்து, முதன் முதலில் கடந்த ஜனவரி மாதம் தனது மகளுடன் மிஸஸ் சென்னை போட்டியில் கலந்து கொண்டார்.

அதில் மிஸஸ் சென்னையாக ஷோபனா அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் நடந்த மிஸஸ் தமிழ்நாடு போட்டியிலும் அம்மா மற்றும் மகள்
இருவரும் இணைந்து வெற்றி பெற்றனர்.

அதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 19ம் தேதி டெல்லியில் நடந்த மிஸஸ் இந்தியா 2025 அழகி போட்டியில் ஷோபனா, தனது மகள் மெர்சி லிண்டாவுடன் பங்கேற்றார்.

இதில் இந்தியா முழுவதிலிமிருந்து 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் ஷோபனா அவர்கள் பிரைட் ஆஃப் மிஸஸ் இந்தியா 2025 என்கிற பட்டத்தை வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.

அவரது மகள் மெர்சி லிண்டா தென்னிந்தியா மிஸ் டீன் விருதினை பெற்று அசத்தினார்.
அம்மா மற்றும் மகள் இருவரும் இணைந்து போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று அசத்தினர்.

இதனை தொடர்ந்து அமெரிக்காவில் நடக்கும் மிஸஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் இந்தியா சார்பில் இருவரும் கலந்து கொள்ள இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.