சென்னை:கமலா பாய் உத்தம் பர்மார் குடும்பத்தினர் இணைந்து பட்டாளம்
டிராகன்ஸ் சாலை பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அரச மரத்தடி விநாயகர் ஆலயத்தின் அருகில் சந்தோஷி மாதா மற்றும் முருகப்பெருமானுக்கு கோவில் அமைத்து பிரவீன் பர்மார் உத்தம் மற்றும் விகாஸ் பர்மார்
ஆகியோரின் தலைமையில் மஹா கும்பாபிஷேகம் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேகத்தை விரும்கம்பாக்கத்தை சேர்ந்த ஸ்ரீ ஹரி கணேஷ் குருக்கள் அவர்கள் மகாயாகம் நடத்தி துவங்கி வைத்தார்.
மங்கள வாத்தியங்கள் முழங்க குடமுழுக்கு நடைபெற்றது.

மேலும் இந்த நிகழ்வில் முக்கிய பிரமுகர்கள், முக்கிய பிரபலங்கள், பட்டாளம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு கடவுளின் பரிபூரண ஆசிர்வாதம் மற்றும் அருளும் பெற்றனர்.