சென்னை : உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏராளமானோர் உயிரிழந்து நாளுக்கு நாள் இந்த கொரோனா வைரஸிலிருந்து தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க அந்தந்த நாடுகள் கடுமையாக போராடி வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் பொருட்டு கடந்த 24 ஆம் தேதி நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவை மத்திய அரசு அறிவித்து, இன்றுடன் 10 நாட்கள் உருண்டோடி விட்டது. மத்திய மாநில அரசுகள் கொரோனா ஒழிப்பதற்காக மேற்கொண்டிருக்கும் நடவடிக்கையின் காரணமாக பல லட்சம் பேர் இன்று வேலை இழந்து மிகுந்த இக்கட்டான சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளனர்.
மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டுமென தொடர்ந்து அனைத்து தரப்பு மக்களும் மத்திய, மாநில அரசுகளை கோரிக்கை விடுத்து வரும் நிலையில் சொற்ப அளவிலான திட்டங்களை மட்டுமே மத்திய, மாநில அரசுகள் அறிவித்த காரணமாக மக்கள் மேலும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் . இன்னும் பதினோரு நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் இத்தனை நாட்களை எப்படி சமாளிப்பது என அனைத்து தரப்பு மக்களும் விழிபிதுங்கி கொண்டிருக்கின்றனர்.

இந்த இக்கட்டான நிலையில் இன்று காலை 9.00 மணி அளவில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டு இந்த உரையின் மீது உரையாற்றுவது பல்வேறு அறிவிப்புகளை பிரதமர் மோடி வெளியிடுவார் என அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர் .
ஏற்கனவே மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்த அறிவிப்புகள் இதுவரை நடைமுறைப் படுத்தாமல் வெறும் அறிவிப்பாக உள்ளது.
அதே போல ரிசர்வ் வங்கியும் அறிவிப்புகளை வங்கிகள் ஏற்காமல் இன்றுவரை கடன் தொகையை வசிக்கும் வசூலிக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தற்போது நாட்டில் நிலவி வரும் பதட்டமான சூழ்நிலையை போக்கும் வகையிலும் மக்களின் வறுமையைப் போக்கும் வகையிலும் பிரதமர் மோடியின் பேச்சு இடம்பெறும் என எதிர்பார்த்திருந்த மக்களுக்கு மோடியின் இன்றைய உரை மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
திட்டங்களை அறிவிப்பதற்கு பதிலாக வரும் ஏப்ரல் 5ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்கு மெழுகுவர்த்திகளை ஏற்ற வேண்டும் என மோடி மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருப்பது ஏமாற்றத்தின் உச்சமாக அமைந்துள்ளது. ஏற்கனவே மருத்துவ பணியாளர்களையும் தூய்மைபணியாளர்களையும் ஊக்குவிக்கும் வகையில் 22ஆம் தேதி மக்கள் தங்கள் வீடுகளிலேயே கைதட்டி ஊக்குவிக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
வட மாநிலங்களில் நடந்த கூத்தை நினைத்து நாடே அதிர்ச்சி அடைந்தது. நலத்திட்டங்களையும், நிவாரணத்தை எதிர்பார்த்திருந்த மக்களிடம் மீண்டும் ஒரு கேலிக்கூத்தான செயலை அரங்கேற்ற வேண்டும் என பிரதமர் மோடி கூறியிருப்பதை மிகுந்த வருத்தமளிக்கிறது. இதுபோன்ற கேலிக்கூத்தான விஷயங்களை தவிர்த்துவிட்டு கொரோனா வைரசை நாட்டிலிருந்தே துரத்தும் போர்க்கால நடவடிக்கைகளை பிரதமர் மோடி மேற்கொண்டால் நாட்டு மக்கள் பாராட்டுவார்கள் என்பதை தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வி.எம்.எஸ்.முஸ்தபா தனது அறிக்கையில் தெரிவித்தார்.
